ரமலான்

இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாம் மாதம்

ரமலான் (Ramadan) (/ˌræməˈdɑːn//ˌræməˈdɑːn/; அரபு மொழி: رمضانRamaḍān, IPA: [ramaˈɮˤaːn];[note 1] இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் ரம்ஜான், ரமலான் எனவும் அழைக்கப்படுகிறது.[1] இம்மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இசுலாமியர்கள் நோன்பை அனுசரிக்கிறார்கள். இசுலாமிய நம்பிக்கையின்படி முகம்மது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக இந்த நோன்பை அனுபவிக்கிறார்கள்.[2][3] ஆண்டுக்கொரு முறை அனுசரிக்கப்படும் இந்த நோன்பு இசுலாத்தின் ஐந்து தூண்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.[4] இந்த மாதமானது நிலவின் பிறைக்காட்சியின்படியும், ஹதீஸ்களில் தொகுக்கப்பட்டுள்ள பல்வேறு வாழ்க்கை வரலாறுகளின்படியும் 29–30 நாட்கள் இருக்கலாம்.[5][6]

ரமதான் என்ற அராபிய வார்த்தையானது ரமிதா அல்லது அர்-ரமத் (சுடும் வெப்பம் அல்லது உலர்தன்மை என்ற பொருளைத் தரக்கூடியது) என்பதிலிருந்து வருவிக்கப்பட்டுள்ளது.[7] நோன்பானது வயது வந்த இசுலாமியர்களுக்கு கட்டாயமான கடப்பாடு ஆகும்.

நோய்வாய்ப்பட்டவர்கள், பயணத்தில் உள்ளோர், வயது முதிர்ந்தோர், கர்ப்பிணிப் பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள், நீரிழிவு நோயாளிகள், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாதவிடாய் காலத்தில் உள்ளோர் ஆகியோர் மட்டுமே நோன்பிருப்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள் ஆவர்.[8] மக்காவில் இருந்து மதீனாவிற்கு இசுலாமியர்கள் குடியேறிய இரண்டாம் வருடத்தில், ஷப்பான் மாதத்தில் ரமலான் நோன்பு நோற்க வேண்டும் என்பது கட்டாயமான கடப்பாடாக இருந்தது. நள்ளிரவு சூரியன் அல்லது துருவ இரவு போன்ற இயற்கை நிகழ்வுடன் வாழும் முஸ்லிம்கள் மக்காவின் கால அட்டவணையைப் பின்பற்ற வேண்டும் என்று பத்வாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.,[9] ஆனால், பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து என்னவென்றால், அந்தந்தப் பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் பகலிலிருந்து இரவை வேறுபடுத்த இயலக்கூடிய நாளிலிருந்து தமக்கு நெருங்கிய நாட்டின் கால அட்டவணையை பின்பற்ற வேண்டும் என்பதாகும்.

விடியற்காலையிலிருந்து சூரிய மறைவு வரை உண்ணாநோன்பு இருக்கும் போது, முஸ்லிம்கள் உணவு உட்கொள்ளல், நீர் மற்றும் திரவங்களை அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் பாலியல் உறவுகளில் ஈடுபடுதல் ஆகியவற்றைத் தவிர்த்து விடுகிறார்கள். தவறான பேச்சு (அவமதிப்பு, புறம்பேசுதல், சபித்தல், பொய் போன்றவை) மற்றும் சுய-பாதுகாப்புக் காரணங்களுக்காக அல்லாமல் பிறருடன் சண்டையிடுவது போன்ற பாவ காரியங்களில் ஈடுபட்டால் அவை நோன்பின் பலனைக் குறைத்து விடுமென்பதால் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதிலிருந்தும் தங்கள் நடத்தையை தவிர்த்து விடுகிறார்கள்.[10][11] நோன்பு தொடங்குவதற்கு முன்னதாக எடுக்கப்படும் உணவானது ஸஹர் எனவும் நோன்பு முடிந்த பின் எடுத்துக் கொள்ளப்படும் உணவானது இப்தார் எனவும் குறிப்பிடப்படுகிறது.[12][13] நோன்பிற்கான ஆன்மீக வெகுமதி (தவாப்) மேலும் ரமலான் மாதத்தில் பெருக்கப்படும் என நம்பப்படுகிறது.[14] ரமலான் மாதத்தில், பொதுவாக பிரார்த்தனைகளை அதிகப்படுத்துதல், திருக்குர்ஆனைப் பாராட்டுதல், பாராது ஒப்புவித்தல் மற்றும் நல்ல செயல்களையும் தொண்டுகளையும் அதிகரித்தல் ஆகியவை அறிவுறுத்தப்படுகிறது. [15] [16]

நோன்பினால் விளையும் நற்பண்புகள்

தொகு

நோன்பின் காலத்தில் தன்னடக்கம், வெகுளாமை, நாவடக்கம், உணவுக்கட்டுப்பாடு, சமூக நலம் பேணுதல் போன்ற நல்ல விளைவுகள் ஏற்படுகின்றன.[17] ரமலான் நோன்பின் பலன்கள் குறித்து திருக்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயம் 183 ஆம் வசனத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. "இறை நம்பிக்கை கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமை ஆக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்" என்பதே அந்த வசனம் ஆகும்.

குறிப்புகள்

தொகு
 1. In contemporary Arabic phonology, it can be [rɑmɑˈdˤɑːn, ramadˤɑːn, ræmæˈdˤɑːn], as well as /ðˤ/ forms, depending on the region.

மேற்கோள்கள்

தொகு
 1. BBCReligions Retrieved 25 July 2012
 2. "Muslims worldwide start to observe Ramadan". The Global Times Online. 2012. பார்க்கப்பட்ட நாள் 28 July 2012.
 3. "The Muslim World Observes Ramadan". Power Text Solutions. 2012. Archived from the original on 11 பிப்ரவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 28 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 4. "Schools – Religions". BBC. பார்க்கப்பட்ட நாள் 25 July 2012.
 5. Bukhari-Ibn-Ismail, AbdAllah-Muhammad. "Sahih Bukhari – Book 031 (The Book of Fasting), Hadith 124". hadithcollection.com. Archived from the original on 19 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 6. Muslim-Ibn-Habaj, Abul-Hussain. "Sahih Muslim – Book 006 (The Book of Fasting), Hadith 2378". hadithcollection.com. Archived from the original on 23 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 25 July 2012.
 7. Muslim-Ibn-Habaj, Abul-Hussain. "Sahih Muslim – Book 006 (The Book of Fasting), Hadith 2391". hadithcollection.com. Archived from the original on 12 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 25 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 8. Fasting (Al Siyam) – الصيام – Page 18, el Bahay el Kholi, 1998
 9. "Ramadan in the Farthest North". Archived from the original on 4 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 16 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 10. Smith, Jane I. (2010). Islam in America. Columbia University Press. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-231-14710-4. பார்க்கப்பட்ட நாள் 30 May 2017. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |first1= and |first= specified (help); More than one of |last1= and |last= specified (help)
 11. Hotaling, Edward (2003). Islam Without Illusions: Its Past, Its Present, and Its Challenge for the Future. Syracuse University Press. p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8156-0766-0. பார்க்கப்பட்ட நாள் 30 May 2017. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |first1= and |first= specified (help); More than one of |last1= and |last= specified (help)
 12. Islam, Andrew Egan – 2002 – page 24
 13. Dubai – Page 189, Andrea Schulte-Peevers – 2010
 14. Bukhari-Ibn-Ismail, AbdAllah-Muhammad. "Sahih Bukhari – Book 031 (The Book of Fasting), Hadith 125". hadithcollection.com. Archived from the original on 15 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 25 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 15. Bukhari-Ibn-Ismail, AbdAllah-Muhammad. "Sahih Bukhari – Book 031 (The Book of Fasting), Hadith 199". hadithcollection.com. Archived from the original on 15 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 25 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 16. Abu Dawud-Ibn-Ash'ath-AsSijisstani, Sulayman. "Sunan Abu-Dawud – (The Book of Prayer) – Detailed Injunctions about Ramadan, Hadith 1370". Center for Muslim-Jewish Engagement of The University of Southern California. பார்க்கப்பட்ட நாள் 25 July 2012.
 17. https://www.vikatan.com/news/spirituality/91167-benefits-of-ramzan-fasting.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமலான்&oldid=3705723" இலிருந்து மீள்விக்கப்பட்டது