சிறுசின்னி
சிறுசின்னி Acalypha fruticosa | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள்
|
வரிசை: | Malpighiales
|
குடும்பம்: | Euphorbiaceae
|
பேரினம்: | Acalypha
|
இனம்: | A. fruticosa
|
இருசொற் பெயரீடு | |
Acalypha fruticosa Forssk. |
சிறுசின்னி (Acalypha fruticosa) என்பது நீர் சூழ்ந்த மலைப் பிரதேசங்களிலும், செம்மண் பூமியிலும் வளரும். அருவிப் பிரதேசங்களிலும் நீரோடும் ஓடைகளின் கரைகளிலும் நிறைய வளர்ந்து இருக்கும். இது குத்து இனச்செடி வகையைச் சேர்ந்தது. ஏறத்தாழ 5 அடி முதல் 7 அடி உயரம் வரை பம்பையாக அடர்த்தியாக வளரக் கூடியது. பல கிளைகள் வெடித்து வளரும். கிட்டிக்கிழங்கு எனவும் இதனை அழைப்பர்.
இதன் இலை ஒரு அங்குல முதல் இரண்டு அங்குல நீளம் வளரக் கூடியது. குறுக்குப் பகுதி ¾ அங்குல அகலம் உடையதாய் இருக்கும். வேப்பிலையைச் சுருக்கியதுபோல் இருக்கும். இலையின் ஓரங்கள் வேப்பிலை போன்று வரம்பு வரம்பாக இருக்கும். நகரப் பகுதிகளில் பூங்காக்களில் குரோட்டன்சாக வைத்து வளர்க்கின்றனர். தண்ணீர் ஊற்ற நன்கு அடர்த்தியாக வளரும். இதில் சிறுசின்னி, பெருஞ்சின்னி என இரண்டு வகைகள் உண்டு. பெரும்பாலும் சிறுசின்னி மருந்திற்குப் பயன்படுத்துவார்கள். பூங்காக்களில் சுவரைப் போல் அடர்த்தியாக வைத்து வளர்ப்பர். பார்ப்பதற்குப் பசுமையாக இருக்கும். மூன்றடி அல்லது நான்கடி உயரத்தில் செடி வெட்டும் கத்தரிக் கோலால் வெட்டிவிடுவர். சில பெரிய பூங்காக்களில் யானை, மயில் போன்ற உருவங்களையும் வெட்டி வைப்பர்.