சிறுதானியம்

உணவு தானியம்

சிறுதானியம் (Millet) என்பது வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய உருவில் சிறியதாக உள்ள தானிய வகைகளைக் குறிக்கும்.[1]

சிறுதானியங்கள் பழந்தமிழர் உணவில் பெரும் பங்கு வகித்தது என்பதை பல்வேறு சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது. மேலும் திருக்குறளில் பல்வேறு பாக்களில் பனை என்பதற்கு எதிர்பதமாய் தினை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வள்ளியை முருகன் தினைக்களத்தில் சந்தித்ததை வள்ளி திருமண கதைப் போக்கில் அறிகிறோம். இவ்வகைத் தகவல்கள் வாயிலாக சிறுதானியம் என்பது பாரம்பரிய உணவு என நிறுவயியலும்.

பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இன்றைய காலச்சுழலான குறைவான மழைப் பொழிவு, குன்றிய மண்வளம், தேவைக்கதிகமான உரப்பயன் பாடு அது ஏற்படுத்தும் சூழல் கேடுகள், வேளாண் இடுபொருள் விலை ஏற்றம் போன்றவை சிறுதானியமே வருங்கால உணவு என கருத வழிவகுக்கிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. சிறுதானியங்கள்
  2. சிறுதானியம்; பெரும்பயன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுதானியம்&oldid=4050458" இலிருந்து மீள்விக்கப்பட்டது