சிறுநீர்க்குறைவு நோய்

சிறுநீர்க்குறைநோய் (Oliguria) அல்லது (hypouresis) ("போதாத சிறுநீர்" என்று பொருள்படும் இரு பெயர்கள்) சிறுநீரின் குறைவான வெளியீடு ஆகும். மனிதர்களில், இது மருத்துவ நிலையில், ஒரு நாளுக்கு 80 மில்லிக்கு மேற்பட்டும் 400 மில்லிக்கு குறைவாகவும் உள்ள நிலை என வரையறுக்கப்படுகிறது. குறைவான சிறுநீர் வெளியேற்றத்தால் நீர்வறட்சி அறிகுறி, [ சிறுநீரகப்பொய்த்தல், குருதிப் பருமன்குறை அல்லது கலநீர்மமிகை அதிர்ச்சி, மிகை ஊடுபரவல் மிகைச்சர்க்கரை கொழுப்புச் சிதையா நிலை நோய்த்தொகை (HHNS)]], பல்லுறுப்பு செயலிழப்பு நோய்த்தொகை, சிறுநீரடைப்பு/சிற்நீர்தேக்கம், நீரிழிவு கொழுப்பமிலமிகை (DKA)]], pre-eclampsia, சிஊநீர்த்தடத் தொற்றுகள் ஆகிய நிலைமைகள் உருவாகலாம்.

சிறுநீர்க்குறைநோய்
Oliguria
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புசிறுநீரகவியல்
ஐ.சி.டி.-10R34.
ஐ.சி.டி.-9788.5
நோய்களின் தரவுத்தளம்23641
மெரிசின்பிளசு003147
பேசியண்ட் ஐ.இசிறுநீர்க்குறைநோய்
Oliguria
ம.பா.தD009846

இதற்கு அப்பால் சிறுநீரின்மைநோய்(அனூரியா) அமைகிறது. இது சிறுநீர் இல்லாதிருப்பதைக் காட்டுகிறது, இது மருத்துவ நிலையிலலொரு நாளுக்கு 80 அல்லது 100 மில்லி என வரையறுக்கப்பட்டுள்ளது.

வரையறை

தொகு

சிறுநீரில் 1 மில்லி / கிலோ / எச் குறைவான அளவு கைக்குழந்தைகளிலும், 0.5 மில்லி / கிலோ / எச் குறைவான அளவு குழந்தைகளிலும், 400 மிலி / மில்லி 0.5 மில்லி லிட்ட்ர்  பொதுவாக பெரியவர்களிலும் காணப்படுகிறது . எடுத்துக்காட்டாக, 70 கிலோ எடையுள்ள பெரியவர்களில் ஒரு வயதுக்கு 0.24 அல்லது 0.3 மில்லி / மணி / கிலோ சமமாகும் என்று சிறுநீர்க்குறைநோய் வரையறுக்கப்படுகிறது.

ஆலிகோ என்பது கிரேக்க மொழியாகும், இவை சிறிய அல்லது குறைவாக எனப் பொருள்படும். [1]

சிறுநீரின்மைநோய் என்பது மருத்துவத்தில் நாள் ஒன்றுக்கு 50மில்லி லிட்ட்ர் குறைவாக சிறுநீர் வெளியேற்றம் எனப் பொருள்படும்.

நோய் கண்டறிதல் அணுகுமுறை

தொகு

சிறுநீரகத்தின் மீயொலி ஆய்வைத் தடைசெய்யும் செயல்முறைகளை தவிர்க்க வேண்டும்.

சிறுநீர்க்குறைநோயை உருவாக்கும் இயங்குமுறைகள் மூன்று வகைகளாக உலக அளவில் பகுக்கப்படுகின்றன:[சான்று தேவை]

  • சிறுநீரகத்துக்கு முன்: சிறுநீரகத்தின் இழையக் குருதிசெறிவுமிகை (எ.கா. குறைவாகத் தண்னிர் குடிப்பதால் ஏற்படும் நீர்வறட்சி விளைவாகவும் இதயவழி அதிர்ச்சியாலும், கடும் வயிற்ருப்போக்காலும்], குளூக்கோசு 6 பாசுவேட்டு நீர்வறட்சிக் குறைபாட்டாலும் கடுங்குருதிப்போக்காலும் அல்லது இழையச் சாவாலும் ஏற்படுவது)
  • சிறுநீரகத்தில்: சிறுநீரகச் செயலிழப்பு ( கடும் இழையக் குருதிசெறிவுமிகை , விரைவான எலும்புச் சிதைவு, மருந்து எடுப்பு போன்றவற்றால் ஏற்படுவது)
  • சிறுநீரகத்துக்குப் பின்: சிறுநீர் பாய்வுத் தடங்கலால் (e.g. சிறுநீரகவாய்ச் சுரப்பி பருத்தல், புற்றமுக்கச் சிறுநீர்ப் பாய்வு,வளரும் குருதிப்புற்று அல்லது நீர்மத் திரள்வு வழியாக ஏற்படுவது)

அறுவைக்குப் பிந்திய சிறுநீர்க்குறைநோய்

தொகு

பெரிய அறுவைக்குப்பின்ஈயல்புச் செயல்பாடுகளை விட மிக குறைவான அளவு சிறுநீர் வெளியேற்றப்படும்.

  • நீர்ம / குருதி இழப்பு - இரண்டாம் நிலைக் குஞ்ச வடிகட்டுதல் அளவு குறைவதால் குருதியோட்ட குறைவு அல்ல்து மன அழுத்தம் ஏற்படும்.
  • அண்ணீரகப் புறணியின் செயல்களால் மாற்றுப் பருவக இசைமம்(Na மற்றும் நீர் தக்கவைத்தல்), எதிர்டிரேரேடிக் இசைமம்(ADH) வெளியிடப்படும்.

கைக்குழந்தைகளில் சிறுநீர்க்குறைநோய்

தொகு

சிறுநீர் 1 மி.லி. / கிலோ / எச் அளவுக்குக் குறைவாக இருக்கும்போது ஒலியுகூரியா, சிறுநீரில் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுத்தும்.[2]

மேலும் காண்க

தொகு
  • சிறுநீர்மிகைநோய் (பேரளவிலான சிறுநீர் வெளியேற்றம்)
  • சிறுநீரின்மைநோய் (மிகக் குறைவான சிறுநீர் வெளியேற்றம்)

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-09-14. பார்க்கப்பட்ட நாள் 2017-07-12.
  2. Arant B (1987). "Postnatal development of renal function during the first year of life". Pediatr Nephrol 1 (3): 308–13. doi:10.1007/BF00849229. பப்மெட்:3153294. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுநீர்க்குறைவு_நோய்&oldid=3872636" இலிருந்து மீள்விக்கப்பட்டது