சிறுநீர்க்குழாய் மொட்டுச் சுரப்பி
சிறுநீர்க்குழாய் மொட்டுச் சுரப்பி | |
---|---|
ஆண் உடற்கூறு | |
உள் உணர்வுத் தமனியின் ஆழ்ந்த கிளைகள. (சிறுநீர்க்குழாய் மொட்டுச் சுரப்பி இடது மையத்தில் குறியிடப்பட்டுள்ளது.) | |
இலத்தீன் | glandulæ bulbourethrales |
கிரேயின் | |
தமனி | சிறுநீர்க்குழாய் மொட்டின் தமனி |
முன்னோடி | சிறுநீரகப் பாலின எலும்பு அறை |
ம.பா.தலைப்பு | Bulbourethral+Glands |
சிறுநீர்க்குழாய் மொட்டுச் சுரப்பிகள் (bulbourethral gland) அல்லது கூப்பரின் சுரப்பிகள் (Cowper's gland) மனித ஆண்களின் இனப்பெருக்கத் தொகுதியில் காணப்படுகின்ற இரு சிறிய சுரப்பிகளாகும். இவை பார்த்தோலின் சுரப்பிகளுக்கு இணையானவை.
உடற்கூறுதொகு
சிறுநீர்க் குழாய் மொட்டு சுரப்பிகள் ஆண்குறியின் அடிப்பகுதியில் ஈரடுக்கு திசுநார்ப் பட்டைகளுக்கிடையில் சிறுநீர்க் குழாய் அருகே அமைந்துள்ளன. இவை பட்டாணி போன்ற அளவுள்ளவை. ஆண் அகவை கூடக்கூட இவை மெதுவாக குறுகுகின்றன.[1] இவை திசுநார்களால் பிணைக்கப்பட்ட பல மடல்களால் ஆனவை.
பயன்கள்தொகு
பாலுறவுத் தூண்டலின்போது இரு சுரப்பிகளும் விந்து தள்ளலுக்கு முன்னர் முன்பீச்சுப் பாய்மம் என்ற தெளிவான நிறமற்ற நீர்மத்தை சுரக்கின்றன. இந்த நீர்மம் சிறுநீர்க் குழாயில் விந்தணு எளிதாக பயணித்திட உயவூட்டுகிறது. இந்தப் பாதையிலுள்ள சிறுநீரையும் தூசுகளையும் நீக்கிடவும் உதவுகிறது.[2]
படிமங்கள்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ Gray's Anatomy, 38th edn, p 1861
- ↑ A neglected gland: a review of Cowper's gland