சிறுநீர்வழி
சிறுநீர்வழி (urethra) அல்லது சிறுநீர்க் கால்வாய் அல்லது சிறுநீர்ப்பைக் குழாய் என்பது உடற்கூற்றியலில் உடலின் நீர்மக் கழிவுகளை வெளியேற்றுவதற்காக சிறுநீர்ப்பையை பிறப்புறுப்புடன் இணைக்கும் குழாயைக் குறிப்பதாகும். ஆண்களுக்கு சிறுநீர்வழியானது ஆண்குறியின் உள்ளாகச் செல்கிறது. அத்துடன் ஆண்களில் இருக்கும் சிறுநீர்வழியானது, பெண்களில் உள்ளதை விடவும் நீளமானது.[1][2][3]
ஆண்களில் சிறுநீர்வழியானது சிறுநீரை மட்டுமன்றி விந்துப் பாய்மத்தையும் வெளியேற்ற உதவுகின்றது. பெண்களுக்கு குறைந்த நீளமே உள்ள சிறுநீர்வழி யோனிக்கு மேலாக வெளியே திறக்கின்றது. பெண்கள் சிறுநீர்வழியை சிறுநீர் கழிக்க மட்டுமே பயன்படுத்துகின்றனர். வரிவரியான வெளி சிறுநீர்வழி சுருக்குதசையானது, கட்டுப்படுத்தக் கூடிய அசைவைக் கொண்டிருப்பதனால், சிறுநீர் கழிப்பதை இச்சைக்கேற்ப கட்டுப்படுத்த உதவுகிறது.
புற இணைப்புகள்
தொகு- வார்ப்புரு:KansasHistology "Male Urethra"
மேற்கோள்கள்
தொகு- ↑ Brading, Alison F. (January 1999). "The physiology of the mammalian urinary outflow tract" (in en). Experimental Physiology 84 (1): 215–221. doi:10.1111/j.1469-445X.1999.tb00084.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0958-0670. பப்மெட்:10081719. https://physoc.onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1469-445X.1999.tb00084.x.
- ↑ Lombardi, Julian (2012-12-06). Comparative Vertebrate Reproduction (in ஆங்கிலம்). Springer Science & Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4615-4937-6.
- ↑ Marvalee H. Wake (15 September 1992). Hyman's Comparative Vertebrate Anatomy. University of Chicago Press. pp. 583–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-87013-7. பார்க்கப்பட்ட நாள் 6 May 2013.