சிறுமுகை பட்டு

சிறுமுகைப்பட்டு பட்டுச் சேலைகள் தயாரிப்பில் இன்று சிறுமுகை மிக உயர்ந்த இடத்தில் உள்ளது. காஞ்சிபுரம், பனாரசு, ஆரணி, கும்பகோணம் வரிசையில் சிறுமுகைப் பட்டு இன்று மிகவும் பெயர்பெற்றுள்ளது. 1970 களில் சிறுமுகைப் பகுதியில் ப்ருத்திச் சேலைகள் தயாரிக்கப்பட்டன. நெசவாளர்களின் வாழ்வாதாரம் பின் தங்கியே இருந்தது. இருப்பினும் இந்தத் தொழிலில் பெரும்பாலோனர் ஈடுபட்டிருந்தனர். வரவுக்கும் செலவுக்குமே சரியாக இருந்த காலகட்டங்களில் பெங்களூர், காஞ்சிபுரம், ஆரணி பகுதிகளில் பட்டுச் சேலை நெசவு பரவலாக இருந்தது.

அங்குப் பட்டுச் சேலைகளை நெய்வதற்கு கூலி அதிகமாக இருந்துவந்தது. ஆகவே இங்கிருந்து கைதேர்ந்த நெசவாளர்கள் பெங்களூர் சென்று பட்டுச் சேலைத் தயாரிப்பில் ஈடுபட்டனர். மேலும், 1977 இல் முதன் முதலாக சிறுமுகைப் பகுதியில் பட்டுச் சேலை தயாரிப்பை அறிமுகப்படுத்தினர். மேலும், இப்பகுதியில் இருக்கும் மற்ற நெசவாளர்கள் அந்தத் தொழில்நுட்பத்தினைக் கற்றுக் கொண்டு, பட்டுச்சேலை நெய்யக் கற்றுக் கொண்டனர் இதே சமயத்தில் கோரா பட்டும் அறிமுகமானது. பட்டும் பருத்தியும் இணைந்து தயாரிக்கப்பட்டதுதான் கோராப்பட்டு. இதன் மூலமாகக் கடினமாக உணரப்பட்ட இந்தத் தொழில்முறை எளிதானதாக மாற்றம் அடைந்தது.

120 ஜக்காடு 240 ஜக்காடு மூலமாகப் பெரிய பெரிய வடிவமைப்புப் பட்டுச் சேலைகள் கோராப் பட்டுச் சேலைகள் தயாரிக்கப்பட்டன. இந்தப் பகுதிகளில் நிறைய கூட்டுறவுச் சங்கங்களும் உருவாக்கப்பட்டு அவைகளும் பட்டுச் சேலைகள், கோரா சேலைகள் தயாரித்தன.சிறுமுகை கைத்தறி நெசவாளர்கள் எளிதாகப் பல புதிய நுட்பங்களைக் கற்றுக்கொண்டு புதிய புதிய முயற்சிகளில் இறங்கினர். அவற்றில் வெற்றியும் கண்டனர். இன்றைய காலகட்டங்களில் கணினியைப் பயன்படுத்தி எண்ணற்ற புனைவுகள் உருவாக்குகின்றனர்.

மயில் தோகைப் பட்டு, திருக்குறள் பட்டு எனத் தயாரிக்கப்பட்டு தேசிய விருதுகளும் இன்று சிறுமுகைப்பட்டு பெற்றுள்ளது.

மேற்கோள்கள்

தொகு

1. https://www.maalaimalar.com/health/naturalbeauty/2022/05/23130248/3795892/sirumugai-silk-sarees-for-Wedding-silk-sarees.vpf

2. https://www.google.com/search?q=sirumugai+pattu+sarees&rlz=1C1GCEA_enIN999IN999&oq=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&gs_lcrp=EgZjaHJvbWUqCAgDEAAYFhgeMgYIABBFGDsyBwgBEAAYgAQyCAgCEAAYFhgeMggIAxAAGBYYHjIICAQQABgWGB4yCAgFEAAYFhgeMgYIBhBFGDwyBggHEEUYPNIBCDcyOTBqMGo3qAIAsAIA&sourceid=chrome&ie=UTF-8

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுமுகை_பட்டு&oldid=3873295" இலிருந்து மீள்விக்கப்பட்டது