சிறேதொகோ தீபகற்பம்
சிறேதொகோ தீபகற்பம் (知床半島 ஷிறேடொகோ அண்தோ) யப்பானின் நான்கு பிரதான தீவுகளுல் மிக வடக்கில் அமைந்துள்ளதான ஒக்கைடோ தீவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது ஒகோட்ஸ் கடலை நோக்கி ஊடுருவி காணப்படுகிறது. யுனெஸ்கோ நிறுவனம் இப்பகுதியை 2005 ஜூலை 15 அன்று உலக உரிமை பிரதேசமாக பிரகடணப்படுத்தியது. சிறேதொகோ என்ற பெயர் இப்பிரதேசத்தின் ஆதி குடிகளின் மொழியான ஐனு மொழியில் உலக முடிவு என்ற அர்த்தம் தரும் பதத்தில் இருந்து யப்பானிய மொழிக்கு மறுவியதாகும்.
புவியியல்
தொகுதீபகற்பத்தின் அந்ததில் காணப்படும் சிறேதொகோ முனை தொடக்கம் தீபகற்கபத்துக்கூடாக சங்கிலித்தொடரான எரிமலைகள் காணப்படுகின்றன. இவ்வெரிமலைத் தொடரில் மிக உயரமான கொடு முடியான உதபெட்சுதகே, மற்றும் சிறேதொகோய்யோசான் என்ற கொடுமுடிகள் பிரசித்தமானவை. இங்குள்ள எரிமலைகளில் இருந்து பல வெண்நீர் ஊற்றுகள் தோற்றம் பெறுகின்றன இவ்வூற்றுகளுக்கு அருகில் ஒன்சென்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. இவ் ஒன்சென்சன்கள் காரணமாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர்.
தாவரங்களும் விலங்குகளும்
தொகுஇங்கு கூம்பு வடிவ ஊசியிலை தாவரங்களும் அகன்ற இலை தாவரங்களும் கலப்பாக காணப்படுகின்றன. நரிகள், பிரவுன் கரடிகள் யப்பானிய மான்கள் போன்றவை இங்கு பரவலாக காணப்படுகின்றதோடு கடல்ச் சிங்கங்கள் அடிக்கடி கடற்கரைக்கு வந்து போவது வழக்கமாகும்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
தொகுஇப்பிரதேசத்தின் இயற்கை அழகை பாதுகாக்கும் வகையிலும் வனவிலங்களின் பாதுக்காப்புக்காகவும் 1964 இல் இப்பிரதேசம் பாதுக்காக்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, சிறேதொகோ தேசிய வனம் நிறுவப்பட்டது. இங்கு சுற்றுலா பயணிகளுக்கு பார்வைக்கன சிறிய பிரதேசம் தவிர ஏனைய பகுதிகளுக்கு மக்கள் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.