சிறை மரம்
தாவர இனம்
சிறை மரம் (Jail tree) என்பது ஒரு நபரைச் சிறையில் அடைக்கப் பயன்படும் மரமாகும். இம்முறையில் கைதி ஒருவர் சங்கிலியால் பிணைக்கப்பட்டு மரம் ஒன்றில் கட்டப்படுகிறார். 19ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அமெரிக்காவின் அரிசோனா பிராந்தியத்தில் சிறை மரங்கள் பயன்படுத்தப்பட்டன. இம்மரங்களில் சில இன்றும் வாழ்கின்றன. ஆத்திரேலியாவிலும் சிறை மரங்கள் பயன்படுத்தப்பட்டன.[1] எடுத்துக்காட்டாக டெர்பி மற்றும் விந்தாமில் உள்ள போப் சிறைச்சாலை மரம்.
எடுத்துக்காட்டுகள்
தொகு- கிளிசன் சிறையில் மரம் : அரிசோனா மாநிலத்தின், தாம்ஸ்டோன் அருகே, கிளிசன் நகரில் உள்ள ஒரு பெரிய கருவாலி மரம். மரத்தின் தூரினைச் சுற்றி ஒரு தடிமனான உலோக கம்பி வடம் மற்றும் சங்கிலி கைதிகளைப் பிணைக்கக் கைவிலங்குகளுடன் உள்ளது. 1909இல் மர-சட்ட சிறைக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு முன்பு இது பயன்பாட்டிலிருந்தது.[2][3]
- சொர்க்க சிறை மரம்: ஒரு இணை கருவாலி மரங்கள், அவற்றுக்கு இடையே ஒரு நீளச் சங்கிலி. கைதிகள் இந்தச் சங்கிலியால் கட்டப்பட்டனர். அரிசோனாவின் கைவிடப்பட நகரமான பாரடைஸில் அமைந்துள்ளது.[4][5]
- ரூபி சிறை மரம்: அரிசோனாவின் கைவிடப்பட்ட நகரமான ரூபியில், மெஸ்கைட் மரங்கள் கைதிகளைச் சங்கிலியால் பிணைக்கப் பயன்படுத்தப்பட்டன. தற்போதைய கான்கிரிட் கட்டடம் 1936 ஆம் கட்டுவதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்டது.
- விக்கன்பர்க் சிறை மரம்: இது 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த மரமாகும். இதில் கைதிகள் சங்கிலி மற்றும் கைவிலங்குகளுடன் பிணைக்கப்பட்டனர். இது அரிசோனாவின் விக்கன்பர்க்கில் அமைந்துள்ளது. 1863 மற்றும் 1890க்கு இடையில் பயன்பாட்டிலிருந்தது. ஆரம்பக்கால விக்கன்பர்க் சுரங்க முகாம் வரலாற்றுத் தொடர்புக்காகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.[6][7]
இதே போன்ற சிறைகள்
தொகு- அரிவாக்கா சிறை: தரையில் கான்கீரீட் பலகை இரு உலோக கம்பிகளுடன் கனமான சங்கிலிகள் இணைக்கப்பட்டிருக்கும். இச்சங்கிலிகளில் கைதிகள் பிணைக்கப்படுவர். அரிசோனாவின் வரலாற்று நகரமான அரிவாக்காவில் அமைந்துள்ளது. [8]
- கிரேட்டர்வில் சிறை: தரையில் ஒரு பெரிய துளையிடப்பட்டிருக்கும். கைதிகளை மேலே அல்லது கீழே விட ஒரு கயிறு பயன்படுத்தப்பட்டது. அரிசோனாவின் கிரேட்டர்வில்லே என்ற பயன்பாட்டில் இல்லா நகரத்தில் அமைந்துள்ளது.[9]
- டூபக் சிறை: கைதியைப் பிணைக்க ஒரு இணை மர இடுகை மண்ணில் புதைக்க இரும்புகளுடன் உள்ளன. அரிசோனாவின் டூபக்கில் உள்ள நகரச் சிறைச்சாலையாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்னர், இவை முதலில் ஒரு ஸ்பானிஷ் கப்பலில் கைதிகளைச் சங்கிலியால் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டன. அவை இப்போது டூபக் பிரசிடியோ மாநில வரலாற்றுப் பூங்காவின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Voices of the land", by Anna Goldsworthy, The Monthly, September 2014.
- ↑ "Gleeson: Arizona Ghost Town". பார்க்கப்பட்ட நாள் 2016-07-16.
- ↑ "Gleeson Arizona: Laws and Lawmen" (PDF). Glenn Snow. 2009. பார்க்கப்பட்ட நாள் 2016-07-16.
- ↑ Ghosts of the Adobe Walls.
- ↑ "Paradise - Arizona Ghost Town". பார்க்கப்பட்ட நாள் 2016-07-16.
- ↑ "Jail Tree: Wickenburg AZ - Official Site". Archived from the original on 2016-08-10. பார்க்கப்பட்ட நாள் 2016-07-16.
- ↑ "Wickenburg's Jail Tree - Weird Arizona". பார்க்கப்பட்ட நாள் 2016-07-16.
- ↑ Murbarger, Nell (1964). Ghosts of the Adobe Walls. Treasure Chest Publications. p. 121.
- ↑ Sherman, James E. (1969). Ghost Towns of Arizona. University of Oklahoma Press. p. 70.
- ↑ "Tubac Presidio State Historic Park & Town of Tubac". பார்க்கப்பட்ட நாள் 2016-07-16.