சிற்றட்டகம்

கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாற்கவிராச நம்பி என்பவர் இயற்றிய நம்பியகப்பொருள் என்னும் நூலின் 251 ஆம் நூற்பாவுக்கு எழுதப்பட்ட உரையில் சிற்றட்டகம் [1] என்னும் பாடல்கள் சில உள்ளன. ஆசிரியப் பாவாலான இந்த இலக்கியப் பாடல்கள் அகப்பொருள் பற்றியவை. பாடலமைதி சங்ககாலப் பாடல்களைப் போல உள்ளதையும், பாட்டிலுள்ள சொல்லாட்சி, பாடலமைதி முதலானவற்றையும் கருத்தில் கொண்டு இதனைக் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு நூல் என்பர்.

தொல்காப்பியர் உரிப்பொருள் மயங்காது என்கிறார். [2]

நாற்கவிராச நம்பி ஐந்திணை வகைப்பாட்டில் உரிப்பொருளும் மயங்கும் என்கிறார். [3]

நம்பியகப்பொருளின் உரையாசிரியர் மயக்கத்துக்கு எடுத்துக்காட்டுகள் தரும்போது ஐங்குறுநூறு, கலித்தொகை, திணைமாலை நூற்றைம்பது முதலான நூல்களிலிருந்து எடுத்துக்காட்டுகள் தரும்போது ‘சிற்றட்டகம்’ என்னும் நூலின் பாடல் என்னும் குறிப்புடன் நான்கு பாடல்களைத் தந்துள்ளார்.

ஐந்து திணைகளின் மேல் வரும் குறும்பாடல்கள் 100 கொண்ட நூல் ஐங்குறுநூறு. அதுபோலச் சிறுபாடல்கள் எட்டு, ஐந்து திணைக்கும் வந்த நூல் எனக் கருதி இதில் (5 வெருக்கல் 8) 40 பாடல்கள் இருந்திருக்கவேண்டும் எனக் கருதுகின்றனர்.

கருவிநூல் தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. இதனைச் சிற்றெட்டகம் என்று சு. வையாபுரிப்பிள்ளை குறிப்பிடுகிறார்.
  2. உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே (தொல்காப்பியம், பொருளதிகாரம், 15, அகத்திணையியல்)
  3. முத்திறப் பொருளும் தத்தம் திணையொடு
    மரபின் வாராது மயங்கலும் உரிய (நம்பியகப்பொருள் 251)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிற்றட்டகம்&oldid=3175882" இலிருந்து மீள்விக்கப்பட்டது