சிற்றம்பலநாடிகள் பரம்பரை

சிற்றம்பல நாடிகள் பரம்பரை கதை

சிற்றம்பல நாடிகள் பரம்பரை 14 ஆம் நூற்றாண்டில் தலைதூக்கி நின்ற சைவப் பரம்பரையாகும். சிற்றம்பல நாடிகளின் மாணாக்கர்கள் 66 பேர். இந்தப் பரம்பரையின் முதல் குரு சிற்றம்பல நாடிகள். ஆசிரியரும், மாணாக்கர்களும் நூல்கள் பல இயற்றி அந்த நூற்றாண்டில் சைவத்தையும் தமிழையும் வளர்த்தனர்.

  • ஆசிரியர் சிற்றம்பல நாடிகள் (காழி - பழுதை கட்டி சிற்றம்பல நாடிகள்) (1325-1350) துகளறு போதம் முதலான பல நூல்களை இயற்றியவர்.
சிற்றம்பல நாடிகளின் மாணாக்கர் மரம்பரை
  1. காழி - பழுதை கட்டிச் சம்பந்த முனிவர் (135-1375) சிவானந்த மாலை என்னும் நூலை எழுதியவர். இவருக்குச் சம்பந்த சரனாலயர் முதலான பல மாணாக்கர்கள் இருந்தனர்.
  2. சீகாழி தத்துவநாதர் (1350-1375)உண்மைநெறி விளக்கம், இருபா இருபது உரை ஆகிய நூல்களை இயற்றியவர்.
  3. காழி தத்துவப் பிரகாசர் (1350-1375) தத்துவப் பிரகாசம், துகளறுபோதக் கட்டளை ஆகிய நீல்களை இயற்றியவர். இவரது மாணாக்கர் பரம முனிவர் என்பவர் தத்துவப் பிரகாச உரை, சித்தாந்த சாரம் ஆகிய நூல்களை இயற்றியவர்.
  4. காஞ்சி ஞானப்பிரகாசர் (1350)
  5. கண்ணப்பர் (1350) இவர் சிற்றம்பல நாடிகள், காஞ்சி ஞானப்பிரகாசர் ஆகிய இருவரிடமும் மாணாக்கராக இருந்தவர். இவரது மாணாக்கர் ஒருவரும் காஞ்சி ஞானப்பிரகாசர் (1350-1375) என்னும் பெயர் பூண்டு விளங்கினார். அவர் ஞானப்பிரகாசர் மடத்தை நிறுவியவர்.
  6. மழபாடிப் பண்டாரம் (1350)
  7. ஏனைய 60 சீடர் (1350)

கருவிநூல் தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005