துகளறுபோதக் கட்டளை

துகளறுபோதக் கட்டளை [1] [2] [3] [4] என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீகாழித் தத்துவப்பிரகாசர் எழுதிய நூல். இதே நூற்றாண்டில் வாழ்ந்த சிற்றம்பல நாடிகள் இயற்றிய துகளறுபோதம் என்னும் நூலை விளங்கிக்கொள்ள உருவாக்கப்பட்ட நூல் இது.

சீடன் வினவக் குரு விளக்கம் சொல்வது போல இந்தக் கட்டளை நூல் அமைந்துள்ளது.

நூலில் வரும் ஒரு விளக்கப் பகுதிதொகு
"ஞான பாதத்துக்கு யோக்கியமான சத்திநிபாதம் பிறந்த ஆன்மாவைத் தேர்ந்த ஆசாரியன், அவனுக்குப் பதி, பசு, பாச உண்மைகளை அருளிச்செய்து, அவன் அறிவில் உள்ள துகளை அறுத்து இசைவிக்கப் பொருந்தின முறைமையைச் சொல்லுகையில், இக் கட்டளை துகளறு போதக் கட்டளை எனப் பேராயிற்று."

அடிக்குறிப்புதொகு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 161. 
  2. வாலையானந்த சுவாமி பதிப்பு 1918
  3. அனவரத விநாயகம்பிள்ளை பதிப்பு 1935
  4. திருவாடுதுறை ஆதீனப் பதிப்பு 1954
"https://ta.wikipedia.org/w/index.php?title=துகளறுபோதக்_கட்டளை&oldid=1442990" இருந்து மீள்விக்கப்பட்டது