சிற்றலை விண்மீன்
சிற்றலை விண்மீன் (blazar) என்பது ஒரு துடிப்பான நீள் வட்ட நட்சத்திரக்கூட்டங்களிலுள்ளதாகக் கருதப்படும் மீப்பெரும் கருந்துளையின் நடுப்பகுதியிலுள்ள மிகச் சிறிய துடிப்பண்டம் ஆகும். சிற்றலை விண்மீன்கள் மிக அதிக அளவுள்ள ஆற்றலைப் பேரண்டத்தில் பெற்றுள்ள வானியல் பொருளாகும். அண்டத்திற்கப்பாலுள்ள வானியல் என்ற புதியப் பகுதி சிற்றலை விண்மீன்களை விளக்குகிறது.[1]
துடிப்பான விண்மீன் மண்டலத்தின் உட்கருவில் பெரிய விண்மீன் மண்டலங்களின் முக்கிய பகுதியாக சிற்றலை விண்மீன்கள் உள்ளன. பால்வெளிப்புற மின்காந்தக் கதிர்வீச்சு வாயில்கள் மற்றும் ஒளி உமிழும் துடிப்பான மாறும் அமைப்பைக் கொண்ட துடிப்பண்டங்கள் ஆகியவை இரு வகையான சிற்றலை விண்மீன்கள் ஆகும். 1978 ல் எட்வர்ட் பீகல் இந்த இரு வகை பிரிவுகளை எடுத்துரைத்தார்.
புவியை நோக்கி சிற்றலை விண்மீன்கள் சார்பியல் கதிரை வெளிவிடுகின்றன.[2] சிற்றலை விண்மீன்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் சார்பியல் கதிரைக் கொண்டு அறிய முடிகிறது. பெரும்பாலான சிற்றலை விண்மீன்கள் மீப்பொலிவு சிறப்பம்சங்களைப் பெற்றிருக்கும்.[3]
ஒளி உமிழும் துடிப்பான மாறும் அமைப்பைக் கொண்ட துடிப்பண்டங்கள் வலிமை வாய்ந்த ரேடியோ விண்மீன் மண்டலங்களிலும், பால்வெளிப்புற மின்காந்தக் கதிர்வீச்சு வாயில்கள் வலிமை குறைந்த ரேடியோ விண்மீன் மண்டலங்களிலும் காணப்படுகிறது. இந்த இரண்டு பிரிவுகளும் நீள் வட்ட அண்டங்களிலே காணப்படுகிறது.
ஈர்ப்பு வில்லை விளைவு மற்ற வகையான சிற்றலை விண்மீன்களின் பிரிவுகளைக் கண்டறிய உதவுகிறது.
அமைப்பு
தொகுதன்னுடைய தாயண்டத்தின் மையத்திலுள்ள மீப்பெரும் கருந்துளையில் விழும் பொருட்களிலிருந்து பெறப்படும் ஆற்றலினால் சிற்றலை விண்மீன்கள் பொலிவு பெறுகின்றன. வாயு, தூசி மற்றும் நட்சத்திரம் ஆகியவற்றை கருந்துளையின் மையப்பகுதி உறிஞ்சிக் கொண்டு, பின் அவற்றை ஒளியணுக்கள், எதிர்மின்னிகள், பாசிட்ரான்கள் மற்றும் அடிப்படைத் துகள்கள் ஆக வெளிவிடப்படுகிறது. இவற்றின் இருப்பிடம் குறைவு, அவை 10−3 புடைநொடி என்ற அளவில் இருக்கும்.
கருந்துளையின் நடுப்பகுதியிலிருந்து பல புடைநொடிகள் வரை, முடிவிலாச் சுருள் வடிவில் மிக அதிகமாக ஒளிரும் உள்ளது. அதில் மிக அதிக அடர்த்தி கொண்ட, அதிக வெப்பம் கொண்ட வாயுக்கள் பொதிந்துள்ளன. இந்த வாயு மேகங்கள் ஆற்றலை உட் கொண்டு பின்னர் உமிழ்கிறது, இந்த செயல் மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது. புவியில் இந்த சிற்றலை விண்மீன்களின் மேகங்களால் உருவாக்கப்படும் மின்காந்த அலைகளின் உமிழ் வரி நிறமாலைகளை பெற முடியும்.
மையப்பகுதிக்கு செங்குத்தாக இரு புறமும் அதிக ஆற்றல் கொண்ட பிளாசுமாவை உருவாக்குகிறது. அவற்றிலிருந்து வெளிவரும் கதிர்கள் மிக சக்தி வாய்ந்த காந்த புலத்தையும் ஒளியணுக்களையும் உண்டாகிறது. கருந்துளையின் மத்தியப் பகுதியிலிருந்து இந்தக் கதிர்கள் பல ஆயிரம் புடைநொடிகள் வரை பரவியிருக்கும்.
சில குறிப்புகள்
தொகுதேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் உருவாக்கிய காம்மா கதிர் விண்வெளி தொலைநோக்கியானது, ஒரு தொலைதூர காம்மா கதிர் சிற்றலை விண்மீனைக் கண்டறிந்துள்ளது. மீப்பெரும் அளவுள்ள கருந்துளைகள் அதிக ஆற்றல் கொண்ட கதிர்களை உருவாவதால் இவை உருவாகின்றது. அவை நம்மிலிருந்து வெகு தொலைவில் உள்ளதால் அவற்றிலிருந்து உருவாகும் ஒளி, நம்மை வந்து அடைய 1.4 பில்லியன் ஆண்டுகள் ஆகிறது.[4]
பெர்மியின் அதிக பரப்பு தொலைநோக்கியின் மூலம் நோக்கும் போது சிற்றலை விண்மீன்களில் பாதிக்கும் மேல் காம்மா கதிர் மூலங்களைக் கொண்டுள்ளது. சூரியனைப் போல பல மில்லியன் மடங்கு அளவுள்ள மீப்பெரும் கருந்துளைகள் உட்கொள்ளும் ஆற்றலை வெளிவிடும் போது சிற்றலை விண்மீன்கள் உருவாகின்றன.
மேலும் பார்க்க
தொகுமேலும் பார்க்க
தொகு- ↑ www.ted.com March 2015 Jedidah Isler How I fell in love with quasars, blazars and our incredible universe
- ↑ C. Megan Urry and Paolo Padovani (1995): "Unified Schemes for Radio-Loud Active Galactic Nuclei", arXiv:astro-ph/9506063
- ↑ Biretta, John (1999-01-06). "HUBBLE DETECTS FASTER-THAN-LIGHT MOTION IN GALAXY M87". Baltimore, Maryland: Space Telecsope Science Institute.
- ↑ "Blazar". NASA. p. 1. பார்க்கப்பட்ட நாள் 30 மே 2018.
வெளியிணைப்புகள்
தொகு- AAVSO High Energy Network
- Expanding Gallery of Hires Blazar Images
- NASA:Blazars Artist Conception Video
- NASA Cosmic Fog
- NASA Gamma Ray Census
- Video May 13 2013, NASA's Fermi Shows How Active Galaxies Can Be-Blazars
- News service (April 2008). "Michigan telescope helps give astronomers insight into blazars". University of Michigan. பார்க்கப்பட்ட நாள் 2008-06-04. (with animation)