சிற்றாற்று வீரியம்மன்
சிற்றாற்று வீரியம்மன் என்பது தென்காசி மற்றும் இலஞ்சியிலுள்ள சிற்றாற்று வீரியம்மன் கோயிலின் மூல பெண் தெய்வம் ஆகும்.
வரலாறு
தொகுதென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் கட்டப்படுவதற்கு முன் அவ்விடத்தில் சிற்றாறு பாய்ந்தோடியது. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கனவில் சிவன் தோன்றி தென்காசி, சித்ரா நதிக்கரையில் ஆலயம் அமைக்குமாறு வேண்டினார். அதற்கு முன் சிற்றாறு, தென்காசி சிற்றாற்று வீரியம்மன் கோயில் தோன்றிய இடத்திலும் மற்றும் இலஞ்சியிலுள்ள சிற்றாற்று வீரியம்மன் கோயில் தோன்றிய இடத்தின் வழியாகவும் சென்றது. சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கனவில் தோன்றிய சிவன் கூறிய இடமோ சிற்றாறு செல்லும் இடத்தில் அமைந்தது. அதனால் அதை தெற்கு நோக்கி திசை திருப்பினான் பாண்டியன்.[1] அந்த தடுத்து நிறுத்தப்பட்ட பழைய சிற்றாறு சென்ற இடங்களில் கட்டப்பட்டதே இந்த 2 கோயில்களும் ஆகும். இக்கோயில்களிலுள்ள அம்மன் சிற்றாறு திருப்பிவிட்டதால் ஏற்படும் வீரிய விளைவுகளை தடுப்பதன் காரணத்தினால் கட்டப்பட்டதாக நம்பிக்கை வைத்ததால் இக்கோயில்கள் சிற்றாற்று வீரியம்மன் கோயில் என பெயர் பெற்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ தினமலர்(ஆகஸ்ட் 06,2010,02:51 IST). "சீரமைக்கப்பட வேண்டிய தென்காசி சிற்றாறு சீர்பெறுமா ?". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: சூலை 04, 2012.
மூலம்
தொகு- தென்காசி நகரில் கூறப்படும் சிற்றாற்று வீரியம்மன் கோயில் கட்டப்பட்டதன் காரணக் கதை