சிலாபட்டா காடு

இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்திலுள்ள ஒரு காடு

சிலாபட்டா காடு (Chilapata Forest) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் அலிப்பூர்துவார் மாவட்டம் தூவார் மண்டலத்தில் உள்ள ஜல்தாபாரா தேசியப் பூங்காவிற்கு அருகில் அமைந்திருக்கும் ஓர் அடர்ந்த காடாகும். அலிப்பூர்துவாரிலிருந்து சுமார் 20 கி.மீட்டர் தொலைவிலும் அசிமரா நகரத்திலிருந்து சில நிமிடங்கள் தொலைவிலும் சிலாபட்டா காடு அமைந்துள்ளது.

சிலாபட்டா காடு
Chilapata Forest
வனம்
சிலாபட்டா காடு Chilapata Forest is located in மேற்கு வங்காளம்
சிலாபட்டா காடு Chilapata Forest
சிலாபட்டா காடு
Chilapata Forest
சிலாபட்டா காடு Chilapata Forest is located in இந்தியா
சிலாபட்டா காடு Chilapata Forest
சிலாபட்டா காடு
Chilapata Forest
ஆள்கூறுகள்: 26°33′02″N 89°22′47″E / 26.550556°N 89.379722°E / 26.550556; 89.379722
நாடு India
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்அலிப்பூர்துவார்

சூழலியல் தொகு

 
இந்திய சிறுத்தை

சிலாபட்டா காடு ஜல்தாபாரா தேசிய பூங்காவிற்கும் பக்சா புலிகள் காப்பகத்திற்கும் இடையில் யானைகளுக்கான நடைபாதையை உருவாக்குகிறது.[1] புதிய இன விலங்குகள்,[2] பெரிய காண்டாமிருகங்கள் உட்பட பல வனவிலங்குகள் இக்காட்டில் வசிக்கின்றன. 1892-1904 ஆம் ஆண்டு காலத்தில் சிலாபட்டா வனப்பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வேட்டையாடிய கூச் பெகர் மன்னன், காண்டாமிருகம் ஒன்றை கொன்றது, ஒன்றைக் காயப்படுத்தியது மற்றும் 14 காண்டாமிருகங்களைப் பார்த்தது போன்ற செய்திகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.[3] தற்பொழுது இக்காட்டில் காண்டாமிருகங்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. பொதுவாக இந்திய சிறுத்தைகளும் இதைப்போலவே அரிதாகி வருகின்றன.[4]

சுற்றுச்சூழல் சுற்றுலா பழங்குடியின ரபா இன மக்களுக்கு ஒரு புதிய வருமான ஆதாரத்தை வழங்கும் என்று நம்பப்படுகிறது. அவர்கள் தற்போது முக்கியமாக விறகுக்காக மட்டுமே காட்டை நம்பியுள்ளனர்.[5]

சுற்றுலா தொகு

மேற்கு வங்க மாநில வன மேம்பாட்டு நிறுவனம் கோடல்பாசுட்டி கிராமத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத அடிப்படை வசதிகள் கொண்ட உல்லாச இருப்பிடங்களை நடத்தி வருகிறது.

 
நல்ராசா கார்

ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவின் பொற்காலம் என்று கருதப்பட்ட குப்தர் காலத்தில் கட்டப்பட்ட பாழடைந்த "நல்ராசா கார்" அல்லது நல் மன்னர்களின் கோட்டை இங்குள்ள முக்கியமான இடங்களில் ஒன்றாகும். மோசமாக பராமரிக்கப்பட்டாலும் இந்த சுற்றுலா தளம் கணிசமான தொல்பொருளியல் ஆர்வத்தைக் கொண்டுள்ளது. மதுரா தேயிலைத் தோட்டத்தின் வழியாக பயணிக்கும் டோங்கா குதிரைச் சவாரி செய்தல், பனியா ஆற்றில் படகு சவாரி செய்தல் மற்றும் கல்கினி, பனியா மற்றும் பூரி பாசுராவின் ஆறுகளின் சங்கமத்தில் பயணம் செய்வது ஆகியவை இதர சுற்றுலா அம்சங்களாகும்.[6]

மேற்கோள்கள் தொகு

புற இணைப்புகள் தொகு

  வெளி ஒளிதங்கள்
  Holiday at Chilapata
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலாபட்டா_காடு&oldid=3631814" இலிருந்து மீள்விக்கப்பட்டது