சிலுவைகளின் குன்று

சிலுவைகளின் குன்று (Hill of Crosses) என்பது வட லித்துவேனியாவில் அமைந்துள்ள சியாவுலியாய் நகரின் வடக்கில் 12 கி.மீ தூரத்தில் உள்ள கிறித்தவ யாத்திரிகர்களின் இடமாகும். இவ்விடத்தில் சிலுவைகளை விட்டுவிட்டுப் போவதற்கான சரியான காரணம் தெரியாது. ஆனால் 1831 எழுச்சியின் பின் முன்னைய மலைக் கோட்டையில் முதலாவது சிலுவை வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.[1] பாரம்பரியமாக இங்கு சிலுவைகள் மாத்திரமன்றி பெரிய திருச்சிலுவை, லித்துவேனியாப் மறைபிதாக்களின் செதுக்கிய உருவங்கள், மரியாளின் சிலைகள், ஆயிரக்கணக்கான சிறிய உருவச்சிலைகள், செபமாலை போன்றவற்றை அங்கு கத்தோலிக்க யாத்திரிகர்கள் எடுத்துச் சென்று வைக்கின்றனர். இங்குள்ள சிலுவைகளின் சரியான எண்ணிக்கை தெரியாது. 1990 இல் நடத்தப்பட்ட கணக்கீட்டின்படி கிட்டத்தட்ட 55,000 என்றும் 2006 இல் 100,000 என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.[2]

கிட்டடிய பார்வையில் சிலுவைகளின் குன்று
பொதுப் பார்வையில் சிலுவைகளின் குன்று

உசாத்துணை

தொகு
  1. Semaška, Algimantas (2006). Kelionių vadovas po Lietuvą: 1000 lankytinų vietovių norintiems geriau pažinti gimtąjį kraštą (in லிதுவேனியன்) (4th ed. ed.). Vilnius: Algimantas. p. 339. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9986-509-90-4. {{cite book}}: |edition= has extra text (help)
  2. Tour to The Hill of Crosses Near Šiauliai பரணிடப்பட்டது 2009-04-17 at the வந்தவழி இயந்திரம். Retrieved 31 October 2009

வெளி இணைப்புக்கள

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kryžių Kalnas
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலுவைகளின்_குன்று&oldid=3244699" இலிருந்து மீள்விக்கப்பட்டது