சிலேடை உலா
சிலேடை உலா என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவராயர் இயற்றிய நூல்களில் ஒன்று. இந்த நூலாசிரியர் தம் குருவான சொரூபானந்தர்மீது இரண்டு உலா நூல் பாடியுள்ளார். ஒன்று தத்துவ காமியம் என்னும் உலா நூல். மற்றொன்று இந்தச் சிலேடை உலா. இந்த நூலின் பெயர் சிலேடையுலா என அமைந்திருந்தபோதிலும் பிற சிலேடை நூல்களில் காணப்படுவது போல் சிலேடைப் பாங்கு அமைவில்லை.
இந்த இரண்டு உலா நூல்களிலும் இவர் தம் பாட்டுடைத் தலைவனின் சிறப்பைக் கூறும்போது ‘குழகன்’ என்று தலைப்பு இட்டுள்ளார்.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005