சில்வன் டோம்கின்சு

அமெரிக்க உளவியலாளர் (1911-1991)

சில்வன் டோம்கின்சு (Silvan Solomon Tomkins 4 சூன் 1911–10 சூன் 1991) என்பவர் உளவியல் அறிஞர் மற்றும் மனித ஆளுமை பற்றிய ஆய்வாளர் ஆவார்.[1]

அபெக்ட் இமேஜரி கான்சியஸ்னஸ் என்னும் இவர் எழுதிய நூல் 4 தொகுதிகளில் வெளி வந்துள்ளது. இந்த நூல் மேலும் பல ஆய்வு நூல்கள் வெளி வருவதற்கு அடிப்படையாய் அமைந்தது.

சில்வன் டோம்கின்சு அமெரிக்காவின் பிலடெல்பியாவில் பிறந்தார். இவருடைய தந்தை இரசியாவைச் சேர்ந்த பல் மருத்துவர் ஆவார்.

பணிகள்

தொகு

1936 முதல் 1943 வரை ஆர்வர்ட் உளவியல் மருத்துவமனையில் ஆய்வு உதவியாளராக இருந்தார். ஆர்வர்டு பல்கலைக்கழகம், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், நியூயார்க்கில் உள்ள சிட்டி பல்கலைக்கழகம், ரட்கர்ஸ் பல்கலைக் கழகம் பெனிசில்வேனியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்பிக்கும் பேராசிரியராகவும் ஆராய்ச்சியாளராகவும் பணி செய்தார்.

கருத்துகள்

தொகு

சினமும் மகிழ்ச்சியும் மனிதனின் இயக்கத்தை எவ்வாறு கொண்டு செல்கிறது என்பதையும் ஒவ்வொரு உணர்வையும் மனவியல் தத்துவத்துடன் தொடர்புப்படுத்தியும் விளக்கமான தேற்றத்தை முன் வைத்தார்.

மனித உணர்வுகளும் உந்துதல்களும் எவ்வாறு தொடர்புகொண்டன என்பது பற்றியும் மனித உணர்ச்சிகள் எவ்வாறு ஆளுமையை வடிவமைக்கிறது, பண்பாடு நடத்தை ஆகியவற்றை எப்படி உருவாக்குகிறது என்பது பற்றியும் டோம்கின்சு ஆய்ந்து விளக்கினார்.

மேற்கோள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்வன்_டோம்கின்சு&oldid=3292509" இலிருந்து மீள்விக்கப்பட்டது