சில்வியா ஜெமிக்னானி
சில்வியா ஜெமிக்னானி (Silvia Gemignani) (பிறப்பு: 1972 செப்டம்பர் 2 பியட்ராசந்தா ) இத்தாலியைச் சேர்ந்த இவர் ஓர் தடகள விளையாட்டு வீரராவார். இவர் நெடுமுப்போடிகளில் போட்டியிடுகிறார்.
ஜெமிக்னானி 2000 கோடைகால ஒலிம்பிக்கில் முதல் ஒலிம்பிக் டிரையத்லானில் போட்டியிட்டார் . இவர் பந்தயத் தூரத்தை 2: 05: 21.26 என்ற மணிக்கணக்கில் ஓடி இருபதாம் இடத்தைப் பிடித்தார். இவர், 2004 கோடைகால ஒலிம்பிக்கில், மீண்டும் போட்டியிட்டார். இதில் 2: 08: 56.94 என்ற நேரத்தில் இருபத்தி ஓராமிடத்தைப் பிடித்தார்.
1997 முதல் 2007 வரை எலைட் வுமன் ஐடியூ பந்தயங்களில் பங்கேற்றார். அதில் இவர் நான்கு முறை விருது பெற்றார். இந்த தொடரில் 01:54:55, என்ற கணக்கில் இவரது சிறந்த ஓட்டம் இருந்தது. இவர் 2001 ஃபோர்டே டீ மர்மி ஐடியூ டிரையத்லான் ஐரோப்பிய கோப்பையை வென்றார். 2001 ஆம் ஆண்டில் பிரியா டா விட்டோரியா ஐடியூ டிரையத்லான் ஐரோப்பிய கோப்பையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். [1]