சில்ஹெட் மாவட்டம்

சில்ஹெட் மாவட்டம் (Sylhet district) (வங்காள மொழி: সিলেট জেলা தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். நாட்டின் வடகிழக்கில் அமைந்த இம்மாவட்டம் சில்ஹெட் கோட்டத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சில்ஹெட் நகரம் ஒரு மாநகராட்சியும் ஆகும்.

வங்காளதேசத்தில் சில்ஹெட் மாவட்டத்தின் அமைவிடம்

மாவட்ட எல்லைகள் தொகு

சில்ஹெட் மாவட்டத்தின் வடக்கில் இந்தியாவின் காசியா-ஜெயந்தியா மலைத் தொடர்களும், தெற்கில் மௌலிபஜார் மாவட்டம், கிழக்கில் இந்தியாவின் அசாம் மாநிலத்தின் கசார் மாவட்டம் மற்றும் கரீம்கஞ்சு மாவட்டம், மேற்கில் சுனாம்கஞ்ச் மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் தொகு

சில்ஹெட் மாவட்டம் பனிரெண்டு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] மேலும் இம்மாவட்டம் ஒரு மாநகராட்சியும், நான்கு நகராட்சிகளும், 102 ஒன்றியங்களும், 3206 கிராமங்களும் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல் தொகு

1332 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதியான முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 34,34,188 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 17,26,965 ஆகவும், பெண்கள் 17,07,223 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 101 ஆண்ககளுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 995 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 51.2 % ஆக உள்ளது.[2]

சமயங்கள் தொகு

 
சில்ஹெட் சாகி ஈத்கா, வங்காளதேசத்தின் பெரியதும், பழைமையானதும் ஆகும்

இம்மாவட்டம் 6,754 மசூதிகளும், 453 இந்துக் கோயில்களும், 96 கிறித்தவ தேவாலயங்களும், நான்கு பௌத்த விகாரங்களும் கொண்டுள்ளது.

பிற தகவல்கள் தொகு

இம்மாவட்டத்தின் சராசரி ஆண்டு மழைப் பொழிவு 3334 மில்லி மீட்டராகும். 236.42 சதுர கிலோ மீட்டர் பரப்பில் காப்புக் காடுகள் கொண்டுள்ளது. மணிபுரி, காசியா, சக்மா, திரிபுரா, பத்ரா, சவ்தால், கரோ, லுசாய் போன்ற முக்கிய பழங்குடி இன மக்கள் இம்மாவட்டத்தில் வாழ்கின்றனர். சுர்மா, குஷிரா, சோனை, பியாயின், பக்ரா, நவா, சாவ்லா, மொனு, தமாலியா, பரதால், ஜூரி, கொயின், சுதாங், மதப்பூர் போன்ற ஆறுகள் இம்மாவட்டத்தில் பாய்கிறது. [3]

மேற்கோள்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sylhet District
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்ஹெட்_மாவட்டம்&oldid=3244735" இருந்து மீள்விக்கப்பட்டது