முதன்மை பட்டியைத் திறக்கவும்
வங்காளதேசத்தில் சுனாம்கஞ்ச் மாவட்டத்தின் அமைவிடம்

சுனாம்கஞ்ச் மாவட்டம் (Sunamganj District) (வங்காள: সুনামগঞ্জ தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் சில்ஹெத் கோட்டத்தில் உள்ளது. வடகிழக்கு வங்காளதேசத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சுனாம்கஞ்ச் நகரம் ஆகும். [1]

மாவட்ட எல்லைகள்தொகு

வடகிழக்கு வங்காள தேசத்தில் அமைந்த சுனாம்கஞ்ச் மாவட்டத்தின் வடக்கில் மேகாலயா மாநிலத்தின் காசியா மற்றும் ஜெயந்தியா மலைத் தொடர்களும், தெற்கில் ஹபிகஞ்ச் மாவட்டம், கிழக்கில் சில்ஹெட் மாவட்டம், மேற்கில் நேத்ரேகோனா மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்தொகு

சில்ஹெட் கோட்டத்தில் 3747.18 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்த இம்மாவட்டத்தை பதினோறு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டம் சுனாம்கஞ்ச், சடோக், திராய் மற்றும் ஜெகன்நாத்பூர் என நான்கு நகராட்சிகளும், 87 ஒன்றியங்களும், 2887 கிராமங்களையும் கொண்டது.

பிற தகவல்கள்தொகு

இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 3000 ஆகும். சுனாமுத்தீன் என்பவர் சுர்மா ஆற்றின் கரையில் ஒரு வணிக சந்தையை நிறுவியதால் இம்மாவட்டத்திற்கு சுனாம்கஞ்ச் எனப் பெயராயிற்று.

அதிகபட்ச வெப்பநிலை 33.2° செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 13.6° செல்சியஸ் ஆகவும், ஆண்டு சராசரி மழையளவு 3334 மில்லி மீட்டராகவும் உள்ளது.

இம்மாவட்டத்தில் சுர்மா, கல்னி, குஷியாரா, பௌலாய், தனு, சாமேஸ்வரி, ஜலால்பூர் முதலிய ஆறுகள் பாய்கிறது. நெல், எண்ணெய் வித்துக்கள், ஆரஞ்ச், மா, காய்கறிகள் பயிடப்படுகிறது. மீன் பிடி தொழிலும் உள்ளது.

மக்கள் தொகையியல்தொகு

3747.18 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 24,67,968 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 12,36,106 ஆகவும், பெண்கள் 12,31,862 ஆகவும் உள்ளனர். (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) பாலின விகிதம் 100 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 659 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 35% ஆக உள்ளது.[2]

சமயங்கள்தொகு

சுனாம்கஞ்ச் மாவட்டத்தில் 3566 பள்ளிவாசல்களும், 740 இந்துக் கோயில்களும் 61 கிறித்தவ தேவாலயங்களையும் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனாம்கஞ்ச்_மாவட்டம்&oldid=2174688" இருந்து மீள்விக்கப்பட்டது