சிவசிவ வெண்பா
சிவசிவ வெண்பா என்பது சென்ன மல்லையர் என்பவரால் எழுதப்பட்டதாகும். இந்நூல் திருக்குறளினை செய்யுள் வடிவில் விளக்குகிறது.
ஆசிரியர்
தொகுசிவசிவ வெண்பா நூலை இயற்றிய புலவர் சென்ன மல்லையர். இவர் வீரசைவர் என்றும், சிதம்பரத்தில் இருந்த பச்சை கந்தையர் மடத்தை சேர்ந்தவர் என்றும் சைவ அறிஞர் மணி, திருநாவுக்கரசு முதலியார் தெரிவிக்கின்றார்.
முதன்முதலாக திருக்குறளை செய்யுள் வடிவில் விளக்க உரை இயற்றியது புலவர் சென்ன மல்லையர் என்பதும், சேமேசர் முதுமொழி வெண்பா, முருகேசர் முது நெறி வெண்பா! இரங்கேசயெர்பா ஆகியவை இந்நூலுக்கு பிற்பட்டது என்பதும் சைவ அறிஞர்களின் கருத்தாகும்.
ஓலைச்சுவடி
தொகுசிவசிவ வெண்பா, சைவ சமய கடவுளான சிவபெருமானை முன்னிருத்தி திருக்குறளினை விளக்குகிறது. இந்நூலின் ஓலைச்சுவடி சென்னை டாக்டர்.உ.வே.சா நூலகத்தில் பாதுகாக்க படுகிறது. நாற்பத்து ஐந்து ஓலைச்சுவடி ஏடுகள் இந்நூல் தொடர்பாக கிடைத்துள்ளன.[1]
பாடல்
தொகு- விற்பிரம்பா லுற்றவடு மேவவுல கெங்குநிறை
- சிற்பரனே தெய்வஞ் சிவசிவா-சொற்சிறந்த
- அகர முதல வெழுத்தெல்லா மாதி
- பகவன் முதற்றே யுலகு.
பொருள்
தொகுஇப்பாடல் வெண்பா ஆகும். சிவபெருமானிடம் அர்ஜூனன் பாசுபத அஸ்திரம் பெறும் முன்கதையின் சிறுபகுதியை இப்பாடல் விவரிக்கிறது.
அர்ஜூனனும், வேடன் வடிவில் சிவபெருமானும் ஒரே நேரத்தில் பன்றி மீது அம்புவிடுகிறார்கள். இறந்த பன்றி எனது என இருவருக்குள்ளும் சண்டை மூழ்கிறது. அப்போது அர்ஜூன் வில்லால் சிவபெருமானை தாக்க, வில்லால் அடித்த அடி உலகத்தார் அனைவர் மீதும் படுகிறது. அர்ஜூனன் தன்னுடன் சண்டையிடுவது ஆதிபகவன் என உணர்கிறார்.
ஆதாரங்கள்
தொகு- ↑ "ஓலைச்சுவடிகள் தேடல் முடிவுகள்". ஓலைச்சுவடிகள் தேடல் முடிவுகள். பார்க்கப்பட்ட நாள் 12 ஏப்., 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)