சிவநாத் சாத்திரி

சிவநாத் சாத்திரி (Sivanath Shastri) அல்லது சிபநாத் சாத்திரி (31 சனவரி 1848 - 30 செப்டம்பர் 1919) என்பவர் வங்காள சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், அறிஞர், ஆசிரியர் தத்துவவாதி மற்றும் வரலாற்றாசிரியர் ஆவார்.[1][2] பக்தியுள்ள இந்து குடும்பத்தில் பிறந்த இவர் இளமையில் பிரம்ம சமாஜத்தில் ஈர்க்கப்பட்டார். இவரது கவிதைத் தொகுப்பு பூஷமாலா மற்றும் பூஷாஞ்சலி ஆகும். இவரது நாவல்கள் யுகாந்தர் மற்றும் நயன்தாரா ஆகும். இவரது சுயசரிதை மற்றும் ராம்தானு லஹிரி ஓ தட்கலின் பங்கா சமாஜ் மற்றும் மத வாழ்க்கை பற்றிய புத்தகம், தர்மஜீவன் குறிப்பிடத்தக்க நூல்கள் ஆகும். இவர் பிரம்ம சமாஜத்தின் வரலாற்றை நூலாக எழுதியுள்ளார்.

சிவநாத் சாத்திரி
Sivanath Sastri
பிறப்பு31 சனவரி 1847
சுபாசுகிராம், கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
இறப்பு30 செப்டம்பர் 1919 (வயது 72)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்சமசுகிறித கல்லூரி பள்ளி
பணிகல்வியாளர், சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர்
அமைப்பு(கள்)பிரம்ம சமாஜம்

மேற்கோள்கள்

தொகு
  1. সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬ পৃষ্ঠা ১০১, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7955-135-6
  2. Haque, Mahbubul (1919-09-30). "Shastri, Shibnath". Banglapedia. பார்க்கப்பட்ட நாள் 2022-07-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவநாத்_சாத்திரி&oldid=3800184" இலிருந்து மீள்விக்கப்பட்டது