சிவன் பூங்கா

சிவன் பூங்கா (ஆங்கில மொழி: Sivan Park) அல்லது டாக்டர் எம். ஜி. ஆர். பூங்கா என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் அமையப் பெற்றுள்ள ஒரு பூங்காவாகும்.

சிவன் பூங்கா
டாக்டர் எம். ஜி. ஆர். பூங்கா[1]
வகைபூங்கா
அமைவிடம்கே. கே. நகர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
Managed byபெருநகர சென்னை மாநகராட்சி
வருகையாளர்900
நிலைபயன்பாட்டிலுள்ளது

சென்னை மாவட்டத்தின் கே. கே. நகர் புறநகர்ப் பகுதியில்,[2] கடல் மட்டத்திலிருந்து சுமார் 59 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சிவன் பூங்காவின் புவியியல் ஆள்கூறுகள் 13°02′30″N 80°12′18″E / 13.0418°N 80.2050°E / 13.0418; 80.2050 ஆகும்.

இப்பூங்காவில் சிவன் கோயில் ஒன்று உள்ளது. அதன் காரணமாகவே, இப்பூங்கா சிவன் பூங்கா என்றழைக்கப்படுகிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான, தனித்தனியாக உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய கூடங்கள், விளையாட்டு உபகரணங்கள், ஒட்டகம், யானை மற்றும் காண்டாமிருகம் ஆகிய வனவிலங்குகளின் கண்கவர் சிற்பங்கள், செயற்கை நீரூற்று, வண்ண வண்ண மலர்கள் தாங்கிய செடிகள், யோகா பயிற்சிக் கூடம், உருளைச் சறுக்கு பயிற்சி வசதி,[3] கராத்தே பயிற்சி வசதி, சிலம்பப் பயிற்சி வசதி, நடைமேடை வசதிகள், மூலிகை தோட்டம் போன்றவை இப்பூங்காவின் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.[4]

'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' என்ற‌ பெயரில், காவடியாட்டம் , கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், தெருக்கூத்து, பொய்க்கால் குதிரை நடனம்[5] போன்ற நாற்பது கலைகளுடன் கூடிய கலாச்சார பண்பாட்டு விழா,[6] 14-01-2023 முதல் 17-01-2023 வரை[7] நடைபெற்ற சென்னையின் முக்கிய பதினெட்டு இடங்களில்[8] சிவன் பூங்காவும் ஒன்று.[9]

மேற்கோள்கள் தொகு

  1. "Welcome to Greater Chennai Corporation". www.chennaicorporation.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-10.
  2. "Sivan Park, K K Nagar, Chennai". greenmesg.org. பார்க்கப்பட்ட நாள் 2023-07-10.
  3. Aruna Natarajan (2020-12-08). "Only two play options for city kids: Unsafe parks or paid facilities". Citizen Matters, Chennai (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-10.
  4. "களைகட்டும் சிவன் பூங்கா - Dinamalar Tamil News". Dinamalar. 2019-02-18. பார்க்கப்பட்ட நாள் 2023-07-10.
  5. Suresh K Jangir (2023-01-12). "சென்னையில் நாளை முதல் நம்ம ஊரு திருவிழா கோலாகலம்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-10.
  6. "TN CM Stalin inaugurates Chennai Sangamam, cultural fest to showcase folk arts and music". The Indian Express (in ஆங்கிலம்). 2023-01-13. பார்க்கப்பட்ட நாள் 2023-07-10.
  7. "4 நாட்கள், 30+ கலை வடிவங்கள் - 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' முக்கிய அம்சங்கள்". Hindu Tamil Thisai. 2022-12-31. பார்க்கப்பட்ட நாள் 2023-07-10.
  8. தினத்தந்தி (2023-01-18). "சென்னையில் 18 இடங்களில் நடந்த சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிறைவு - பொதுமக்கள் ஆர்வத்தோடு பார்த்து ரசித்தனர்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-10.
  9. "நம் மண்ணின் கலைகளை வளர்ப்போம்! தமிழ்ப் பண்பாட்டைக் காப்போம்! - முதலமைச்சர் ஸ்டாலின்". ETV Bharat News. பார்க்கப்பட்ட நாள் 2023-07-10.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவன்_பூங்கா&oldid=3752868" இலிருந்து மீள்விக்கப்பட்டது