சிவப்பணுவாக்கி
சிவப்பணுவாக்கி (Erythropoietin, erythropoetin, erthropoyetin, EPO, hemopoietin அல்லது hematopoietin) என்பது சிவப்பணு உற்பத்தியைக் (erythropoiesis) கட்டுப்படுத்தும் கிளைக்கோப்புரத இயக்குநீராகும். இது, எலும்பு மச்சையிலுள்ள சிவப்பணு முன்னோடிகளுக்கானச் சைட்டோக்கைனாகும் (புரத சமிக்ஞை மூலக்கூறு). மனித சிவப்பணுவாக்கியின் மூலக்கூறு நிறை 34 கிலோ டால்டன்கள்.
குழல்வெளி நுண்குழல்கள், அண்மைச்சுருள் நுண்குழல்களுடன் தொடர்பு கொண்ட, சிறுநீரகத்திலுள்ள இடையீட்டு நாரியற்செல்களால் சிவப்பணுவாக்கி உருவாக்கப்படுகிறது. சிவப்பணுவாக்கியானது கல்லீரல் செல்களினாலும் (perisinusoidal cells) உருவாக்கப்படுகிறது. உருப்பெற்றகரு நிலையிலும், பிரசவத்துக்கு-முன்னான காலத்திலும் கல்லீரல் செல்களினால் உருவாக்கப்படும் சிவப்பணுவாக்கி மேம்பாடடைந்தும், முதிர்பருவத்தில் சிறுநீரகத்தில் உற்பத்தி செய்யப்படுவது முதன்மையாகவும் இருக்கும். சிவப்பணு உற்பத்தியைத் தவிர்த்து பிற உயிரியல் செயற்பாடுகளையும் சிவப்பணுவாக்கிக் கொண்டுள்ளது. உதாரணமாக, நரம்பணு காயப்படும்போது நிகழும் மூளையின் தூண்டற்பேற்றில் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது[1]. காயம் குணமாகும் நிகழ்விலும் சிவப்பணுவாக்கியின் பங்கு உள்ளது[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ Siren AL et al.; Fratelli, M.; Brines, M.; Goemans, C.; Casagrande, S.; Lewczuk, P.; Keenan, S.; Gleiter, C. et al. (2001). "Erythropoietin prevents neuronal apoptosis after cerebral ischemia and metabolic stress". Proc Natl Acad Sci USA 98 (7): 4044–4049. doi:10.1073/pnas.051606598. பப்மெட்:11259643.
- ↑ Haroon ZA, Amin K, Jiang X, Arcasoy MO (September 2003). "A novel role for erythropoietin during fibrin-induced wound-healing response". Am. J. Pathol. 163 (3): 993–1000. doi:10.1016/S0002-9440(10)63459-1. பப்மெட்:12937140. பப்மெட் சென்ட்ரல்:1868246. http://ajp.amjpathol.org/cgi/content/abstract/163/3/993. பார்த்த நாள்: 2013-09-14.