சிவப்புக் கடற்கரை (சீனா)

சிவப்புக் கடற்கரை (Red Beach; சீன மொழி: 红海滩) என்பது சீனாவின், லியாவோனிங் மாகாணத்தின் பன்ஜின் பகுதியில் உள்ள, செனோபோடீசியா குடும்ப சிவப்புத் தாவரங்களினால் அமைந்துள்ள புகழ்வாய்ந்த இடமாகும்.[1] இது பெரிய ஈர நிலங்களிலும் கோரைப்புல் (பாசி என்றும் கூறுகின்றனர் ) சதுப்பு நிலங்களிலும் காணப்படும். இப்பகுதி ஆழமற்ற கடல், அலையுள்ள நிலம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.[2][3][4] பன்ஜின் பகுதியில் லியாவோஹி என்னும் ஆறு கடலில் கலக்கும் இடத்தில் உள்ள கழிமுகத்தில் இப்பகுதி உள்ளது. இது தண்ணீருடன் கூடிய சதுப்பு நிலப் பகுதியாகும். சனவரி முதல் மார்ச் வரை பிற கடற்கரைகள் போலவே காட்சியளிக்கும். ஏப்ரல் இறுதியில் வசந்த காலத்தில் பச்சை வண்ணத்தில் கோரைப்புற்கள் முளைக்கின்றன. 3 மாதங்களுக்குப் பிறகு, கோடைக்காலத்தில் இவை அடர் சிவப்பு வண்ணமாக மாறி, ஆகத்து முதல் அக்டோபர்வரை உலகின் அழகிய கடற்கரையாகக் காட்சியளிக்கிறது. நவம்பர், திசம்பர் மாதங்களில் இவை இளஞ்சிவப்பு நிறத்தை அடைந்து, குளிர் காலத்தில் காய்ந்துவிடுகின்றன. மூன்று மாதங்களில் மீண்டும் கோரைப்புற்கள் புதிதாக உருவாகிவிடுகின்றன.

சிவப்புக் கடற்கரை, பன்யின், சீனா

இயற்கையிலேயே கோரைப்புற்கள் சிவப்பாக மாறிவிடுவதாகவும், கடற்கரை மண்ணிலுள்ள உப்பும் காரத்தன்மையுமே சிவப்பு நிறத்தைத் தருகிறது என்கிறும் ஆய்வாளர்களிடையே இருவேறு கருத்துகள் இருந்துவருகின்றன.

பன்ஜின் இந்த சிவப்புக் கடற்கரை 51 சதுர மைல் பரப்பளவில் பரவியுள்ளது. இந்தத் தனித்துவம் மிக்க அழகிய கடற்கரையை அரசு மிகக் கவனமாகப் பாதுகாத்துவருகிறது. அதனால் மிகக் குறைவான இடத்தை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு அனுமதிக்கிறார்கள். சீனாவிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஒவ்வோர் ஆண்டும் வருகிறார்கள்.[5]

உசாத்துணை

தொகு
  1. Suaeda salsa (in Chinese)
  2. விநோத உலகம்: சிவப்புக் கடற்கரை!
  3. THAT'S what you call a sea of red!
  4. Panjin Red Beach, China
  5. எஸ்.சுஜாதா (2016 ஊலை 20). "விநோத உலகம்: சிவப்புக் கடற்கரை!". தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 20 சூலை 2016. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்புக்_கடற்கரை_(சீனா)&oldid=3244811" இலிருந்து மீள்விக்கப்பட்டது