சிவப்பு நிறமி 190

சிவப்பு நிறமி 190 (Pigment Red 190) என்ற கரிமச் சேர்மம் ஒரு நிறமூட்டும் பொருளாகவும் தொட்டிச் சாயமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இச்சேர்மத்தின் வேதிவாய்ப்பாடு C38H22N2O6 ஆகும். பெரிலீன் டெட்ரா கார்பாக்சிலிக் இருநீரிலியுடன், அசிநாப்தீன் சேர்த்து சிவப்பு நிறமி 190 வருவிக்கப்பட்டாலும் இதை அமைப்பு ரீதியில் பெரிலீன் வழிப்பொருளாகவே கருதுகிறார்கள். தொட்டிச் சிவப்பு 29 என்ற பெயராலும் சி.ஐ. 71140 என்ற அடையாள எண்ணாலும் இந்நிறமி அறியப்படுகிறது.[1]

சிவப்பு நிறமி 190
இனங்காட்டிகள்
6424-77-7
பண்புகள்
C38H22N2O6
வாய்ப்பாட்டு எடை 602.59 கி/மோல்
தோற்றம் அடர் சிவப்பு திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பருத்தித் துணிகள், பட்டுத்துணிகள், வழியுறுதிச் சாயமிடல் மற்றும் பாலிவினைல் ஆல்ககால் முதலானவற்றில் பொதுவாக சிவப்பு நிறமி 190 பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. K. Hunger. W. Herbst "Pigments, Organic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2012. எஆசு:10.1002/14356007.a20_371
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பு_நிறமி_190&oldid=2169505" இலிருந்து மீள்விக்கப்பட்டது