சிவிந்தர் மோகன் சிங்
சிவிந்தர் மோகன் சிங் (Shivinder Mohan Singh) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஆவார். போர்டிசு சுகாதார சேவை என்ற சங்கிலித் தொடர் மருத்துவமனைகள் , ரெலிகேர் என்ற இந்திய முதலீடு மற்றும் நிதிச் சேவைகள் நிறுவனம், மற்றும் ரான்பாக்சி ஆய்வகங்கள் எனப்படும் இந்திய பன்னாட்டு மருந்து நிறுவனம் ஆகியவற்றின் முன்னாள் பில்லியனர் ஆவார். இந்திய நிறுவனமான போர்டிசு சுகாதார சேவை மருத்துவமனையில் சிங் அந்நிறுவனத்தின் நிர்வாகமல்லாத துணைத் தலைவராக இருந்தார். தற்போது தனது சகோதரர் மல்விந்தர் மோகன் சிங்குடன் நம்பிக்கை மீறல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவர் மீதும் பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன.[1][2]
சிவிந்தர் மோகன் சிங் Shivinder Mohan Singh | |
---|---|
2009 ஆம் ஆண்டில் சிவிந்தர் மோகன் சிங் | |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | புனித இசுடீபன் கல்லூரி , தில்லி (BA) டியூக் பல்கலைக்கழகம் (MBA) |
பணி | வணிகர் |
Criminal penalty | வீட்டுச் சிறை |
வாழ்க்கைத் துணை | அதிதி எசு. சிங் |
பிள்ளைகள் | 4 |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுசிங், மருத்துவர். பிரவீந்தர் சிங்கின் மகனும், ரான்பாக்சி ஆய்வகங்களின் நிறுவனர் பாய் மோகன் சிங்கின் பேரனும் ஆவார்,[3] சப்பான் மருந்து தயாரிப்பாளரான டெய்ச்சி சாங்கியோவின் ஒரு பிரிவாக இருந்த சன் மருந்து நிறுவனத்துடன் ரான்பாக்சி இணைக்கப்பட்டது.
வணிக வாழ்க்கை
தொகுசிங் மற்றும் அவரது சகோதரர் மல்விந்தர் மோகன் சிங் [4] 1999 ஆம் ஆண்டில் இவர்களின் தந்தையின் மரணத்திற்குப் பிறகு ரான்பாக்சியில் 33.5% பங்குகளைப் பெற்றனர். ஏப்ரல் 2015 ஆம் ஆண்டு ஏப்ரலில் இவர்கள் 2.5 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் முப்பத்தைந்தாவது பணக்கார இந்தியர்களாக இருந்தனர்.[5]
கல்வி
தொகுசிங் தி டூன் பள்ளியில் பயின்றார், பின்னர் தில்லியில் உள்ள செயின்ட் இசுடீபன் கல்லூரியில் கணிதத்தில் ஆனர்சு பட்டம் பெற்றார்; அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தின் ஃபுகுவா வணிகப் பள்ளியில் சுகாதாரத் துறை நிர்வாகத்தில் நிபுணத்துவத்துடன் எம்பிஏ பட்டம் பெற்றார்.[6]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசிங் தனது மனைவி அதிதி எசு. சிங் [7] மற்றும் அவர்களது நான்கு மகன்களுடன் புது தில்லியில் வசிக்கிறார்.[8] செப்டம்பர் 24 ஆம் தேதியன்று, போர்டிசு மருத்துவமனையின் ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது, சிங் தனது பதவி விலகலை அறிவித்தார். மருத்துவமனை சங்கிலியின் கட்டுப்பாட்டை அவரது சகோதரரிடம் ஒப்படைத்தார்.
கைது
தொகுநவம்பர் 1, 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதி சகோதரருடன் சிங் கைது செய்யப்பட்டார். நீதிமன்றக் காவல் 14 நவம்பர் 2019 வரை நீட்டிக்கப்பட்டது.[9] டிசம்பர் 12, 2019 அன்று, தில்லி நீதிமன்றம் ரெலிகேர் இந்திய முதலீடு மற்றும் நிதிச் சேவைகள் நிறுவனத்தின் ) நிதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் இவரது சாமீன் மனுவை நிராகரித்தது.[10][11]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Explained: The cases against Religare ex-promoters Malvinder Singh and Shivinder Singh" (in en-IN). இந்தியன் எக்சுபிரசு. 11 October 2019. https://indianexpress.com/article/explained/malvinder-singh-shivinder-singh-ranbaxy-fortis-6064585/.
- ↑ "Ex-Ranbaxy promoters Malvinder, Shivinder Singh sent to police custody". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 11 October 2019. https://timesofindia.indiatimes.com/business/india-business/singh-brothers-3-others-get-4-day-custodial-interrogation-in-rfl-case/articleshow/71538887.cms.
- ↑ Bhandari, Bhupesh (22 October 2014). "40 Years Ago... And now: Ranbaxy grew with liberal regimes, moving out of family control". Business Standard. http://www.business-standard.com/article/companies/40-years-ago-and-now-ranbaxy-grew-with-liberal-regimes-moving-out-of-family-control-114102101500_1.html. பார்த்த நாள்: 17 December 2014.
- ↑ "Fortis - In the pick of healthcare". Business Today. 17 September 2011. பார்க்கப்பட்ட நாள் 17 December 2014.
- ↑ "Malvinder & Shivinder Singh on Forbes Lists". Forbes. பார்க்கப்பட்ட நாள் 17 December 2014.
- ↑ "Shivinder Mohan Singh". Bloomberg. Archived from the original on 17 December 2014. பார்க்கப்பட்ட நாள் 17 December 2014.
- ↑ "ET ILC members discuss possibility of integrated healthcare system in India". தி எகனாமிக் டைம்ஸ். 9 December 2019. https://economictimes.indiatimes.com/industry/healthcare/biotech/healthcare/et-ilc-members-discuss-possibility-of-integrated-healthcare-system-in-india/articleshow/72431958.cms.
- ↑ "Shivinder Mohan Singh: The wellness mogul". தி எகனாமிக் டைம்ஸ். 8 September 2008. https://economictimes.com/industry/healthcare/biotech/healthcare/shivinder-mohan-singh-the-wellness-mogul/articleshow/3456269.cms.
- ↑ "RFL scam: Court extends till November 14 judicial custody of ex-Fortis promoters Malvinder, Shivinder". The Economic Times. 31 October 2019. https://economictimes.indiatimes.com/industry/healthcare/biotech/healthcare/rfl-scam-court-extends-till-november-14-judicial-custody-of-ex-fortis-promoters-malvinder-shivinder/articleshow/71836479.cms. பார்த்த நாள்: 1 November 2019.
- ↑ "Delhi Court Rejects Bail Plea Of Ex-Fortis Chief Shivinder Singh". 12 December 2019. https://www.ndtv.com/india-news/delhi-court-rejects-bail-plea-of-ex-fortis-chief-shivinder-singh-2147995.
- ↑ "ED Arrests Former Fortis Promoter Shivinder Singh in RFL Money Laundering Case". 12 December 2019. https://www.news18.com/news/business/ed-arrests-former-fortis-promoter-shivinder-singh-in-rfl-money-laundering-case-2422499.html.