சிவேஜிகன் தூபி

சிவேஜிகன் தூபி அல்லது ஷ்வேஜிகன் பாயா என்பது மியான்மரில் உள்ள பாகன் அருகிலுள்ள நியாங்-யூ என்ற இடத்தில் உள்ள ஒரு புத்த கோவிலாகும். இந்தக் கோவில், பர்மிய தூபிகளின் ஒரு முன்மாதிரி, சிறிய கோவில்கள் மற்றும் புனிதத் தலங்களால் சூழப்பட்ட மையப்பகுதியில் ஒரு வட்டமான தங்க இலை வடிவ தூண் கொண்டது.

சிவேஜிகன் தூபி
சிவேஜிகன் தூபி
Map
பொதுவான தகவல்கள்
வகைஅடுக்குத் தூபி, பௌத்தம்
இடம்நியாங்-யூ, மியான்மர்
ஆள்கூற்று21°11′43″N 94°53′38″E / 21.19528°N 94.89389°E / 21.19528; 94.89389

இந்தக் கோவிலைக் கட்டும் பணி கி.மு 1059–1060 ஆம் ஆண்டில் பகான் வம்சத்தை தோற்றுவித்த அரசர் அனுவரதா (ஆட்சி காலம் 1044 ஆண்டு தொடங்கி-1077 வரை) என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் கி.மு. 1102 ஆம் ஆண்டுவாக்கில் அரசர் கியன்சித்தா ஆட்சியின் போது நிறைவுற்றது.

பல நூற்றாண்டுகளாக தூபி பல பூகம்பங்கள் மற்றும் பிற இயற்கைப் பேரழிவுகளால் சேதமடைந்தது, பல முறை புதுப்பிக்கப்பட்டது. சமீபத்திய புனரமைப்புகளின் போது 30,000 தாமிர தகடுகளால் தூபி மூடப்பட்டுள்ளது. இருப்பினும், குறைந்த உயரம் கொண்ட மாடிகள் இன்றளவும் எந்தப் பாதிப்புக்கும் உள்ளாகாமல் அப்படியே இருக்கிறது.

வரலாறு தொகு

 
1855 இல் சிவேஜிகன் தூபி

பர்மாவின் அரசர்களின் தலைசிறந்தவராக கருதப்பட்ட அரசர் அனவரதா (ஆட்சிக்காலம் 1044–1077) (தாடோனிலிருந்து வந்த துறவிகள் மூலமாக தேரவாத பௌத்தமதத்திற்கு மாற்றப்பட்டார்)[1] 1059–1060 ஆம் ஆண்டில் அதன் கட்டுமானத்தைத் தொடங்கினார். 1077 ஆம் ஆண்டு வெறிபிடித்த எருமை மாடு அனவரதாவை கொன்றதாக நம்பப்படுகிறது.[2]:151,156[3][4] தூபி கட்டுவதற்கான இடத்தை அரசர் அனவரதா பின்வரும் ஒரு புதுமையான முறையில் தேர்ந்தெடுத்தார். புத்தரின் எழும்புடன் கூடிய சிலையுடன் ஒரு யானையை அதன் போக்கில் உலாவவிடப்பட்டது. அந்த யானை இறுதியாக எந்த இடத்தில் நடந்து சென்று நிற்கிறதோ அந்த இடத்தையே கோவில் கட்டும் இடமாக தேர்ந்தெடுத்தார். தற்போது கோவில் அமைந்திருக்கும் மணற்பாங்கான இடம் இந்த முறையில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டது. பர்மிய மொழியில் சிவேஜிகன் தூபி என்றால் மணற்பாங்கான இடத்தில் அமைந்த தூபி என்று பொருள் அதவே கோவிலின் பெயர் காரணமாகவும் அமைந்தது.

பண்புகள் தொகு

 
புத்தர்

சிவேஜிகன் தூபி, பர்மிய தூபிகளின் ஒரு முன்மாதிரியாகும் மற்றும் பாரம்பரிய மோன் மக்களின் ஒரு மணி-வடிவ தூபியைப் போன்றது, இது பர்மாவில் (தற்போது மியான்மர்) கட்டப்பட்ட பல அடுக்கு தூபிகளின் முன்மாதிரி கட்டிடக்கலை அம்சமாக மாறியது. இந்தக் கோவிலில் படிக்கட்டுகள், வாயில்கள் மற்றம் விலை உயர்ந்த அணிகளன்கள், மாணிக்க கற்கள் கொண்டு நன்கு அலங்கரிக்கப்பட்ட தங்கத்தால் ஆன ஒரு குடை போன்று அமைப்பை கொண்டது. மேலும் இங்கு இருக்கும் புத்தரின் சிலைகள் அவரது எழும்பை கொண்டும் இலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட புத்தரின் பற்கள் கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பெளத்த மதத்தில் இந்தக் கோவில் ஒரு புனிதத் தலமாகவும் இருக்கிறது.

இந்தக் கோவிலின் வெளிப்புற எல்லையில் ஒரு 37 நாட்ஸ் (மனிதர்கள்) என்றழைக்கப்படும் சிறந்த மரவேலைபாடுகளுடன் கூடிய தாங்கியமின் சிலை இருக்கும் ஒரு புனிதத் தலம் உள்ளது. இது 900 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது மேலும் பௌத்த பிட்சு தேவா சக்ரா இந்த நாட்களின் தலைவராக கருதப்படுகிறார்; இது இந்திய கடவுளான இந்திரனின் பர்மிய பதிப்பாகும், இது அவரது ஆயுதமான, இடியுடன் கூடியது. இந்த புனித தலத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக 37 நாட் (மனிதர்கள்) ஆன்மாக்களின் இந்த கோவிலில் கட்டப்பட்டுள்ளன.

ஐந்து சதுர மாடியுடன் கூடிய தூபி, ஒரு திடமான மையமாக உள்ளது. இது மாடியிலிருந்து ஒரு பிரமிடு அல்லது 'குடை' வடிவத்தில் மேலே உள்ளது. அடிப்பகுதியில் இருந்து முனை வரை, முழு குடையையும், ஒரு கூம்பு போல தோன்றுகிறது. நான்கு திசைகளில் இருந்து பக்தர்கள் வழிபாடு செய்ய வந்து செல்ல வசதியாக மையத்தில் இருந்து மாடிக்கு செல்ல படிகட்டுகள் உள்ளன; மாடிக்குச் செல்லும் வழியில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் விதமாக சுவர்களில் வரையப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Shwezigon Pagoda at Pagan". British Library On Line gallery. பார்க்கப்பட்ட நாள் 8 November 2015.
  2. Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.
  3. "Shwezigon Paya Temple (built late 11th century)". Asian Historical Architecture. பார்க்கப்பட்ட நாள் 8 November 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவேஜிகன்_தூபி&oldid=2774878" இலிருந்து மீள்விக்கப்பட்டது