சிவ் சரண் கோயல்

சிவ் சரண் கோயல் ஒரு இந்திய அரசியல்வாதி. தில்லி ஆறாவது சட்டமன்றத்தின் உறுப்பினர். இவர் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் மற்றும் மோதி நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.  [1] மேலும் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டு முறை (2015 மற்றும் 2020)தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது மோதி நகரில் அமைந்துள்ள ஆச்சார்யா பிக்ஷு மருத்துவமனையின் (ரோகி கல்யாண் சமிதி) தலைவராக உள்ளார். விளையாட்டு சிறப்பு விசாரணைக் குழு, சுகாதார நிலைக்குழு, திகார் சிறை மற்றும் ரோகிணி சிறை, தனியார் உறுப்பினர்கள் மற்றும் மசோதாக்கள் தீர்வுக் குழு, தில்லி அரசின் வணிக ஆலோசனைக் குழு போன்ற பல துறைகள் மற்றும் குழுக்களில் உறுப்பினராக உள்ளார்.

சிவ் சரண் கோயல்
Shiv Charan Goel
மோதி நகர் சட்டமன்ற உறுப்பினர்
பின்னவர்சுபாஷ் சச்தேவா
தொகுதிமோதி நகர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 பிப்ரவரி 1962
அரசியல் கட்சிஆம் ஆத்மி கட்சி
வாழிடம்புது தில்லி
தொழில்அரசியல்வாதி மற்றும் சமூக சேவகர்

2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற தில்லி சட்டமன்றத் தேர்தலில் மேற்கு தில்லியின் மோதி நகர் தொகுதியில் போட்டியிட்டு பாரதிய ஜனதா கட்சியின் ஸ்ரீ சுபாஷ் சச்தேவாவை 15,200 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். மீண்டும் 2020 பிப்ரவரியில் அதே மோதி நகரில் இருந்து சட்டமன்றத்துக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2]


வகித்த பதவிகள்

தொகு
# தொடக்கம் இறுதி பதவி குறிப்பு
01 2015 - தில்லியின் ஆறாவது சட்டமன்றத்தின் உறுப்பினர்
02 2020 - தில்லியின் ஏழாவது சட்டமன்றத்தின் உறுப்பினர்

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ்_சரண்_கோயல்&oldid=3858190" இலிருந்து மீள்விக்கப்பட்டது