சிவ தனுசு

இந்து தொன்மவியலின் அடிப்படையில் சிவதனுசு என்பது சிவபெருமானுடைய ஆயுதமாகும். ஜனகரின் மூதாதையர்களுக்கு சிவபெருமான் இந்த தனுசை அளித்தார். பல தலைமுறைகள் கடந்தபின்பு ஜனகர் தன்னுடைய மகளான சீதாவின் சுயம்வரத்தில் சிவதனுசில் நாண் பூட்டுகின்றவருக்கு சீதையை திருமணம் செய்து வைக்க எண்ணி போட்டி வைத்தார். சுயம்வரத்தில் கலந்து கொண்ட இராமர் சிவதனுசை நாண்பூட்டி உடைத்தார் என்கிறது இராமாயணம்.[1]

ராமன் சிவதனுசில் நாண் பூட்டுதல்

தொன்மம்தொகு

விஸ்வகர்மா எனும் தேவலோகத்தில் இருக்கின்ற தச்சர் இரு மகோன்னத தனுசுகளைச் செய்தார். அந்த தனுசுகள் இரண்டுமே மிகவும் வலிமை வாய்ந்ததாகவும், மேரு மலையை போல உறுதியானதாகவும் இருந்தன. அந்த தனுசுகளைச் சிறப்பிக்கும் வண்ணம் ஒரு தனுசைச் சிவபெருமான் எடுத்துக் கொண்டார். பின்னர் மற்றொரு தனுசு திருமாலிடம் கொடுக்கப்பட்டது. இந்த ஆயுதங்களில் எது சிறந்தது என தேவர்களுக்குள் ஐயம் எழுந்தது. அவர்கள் பிரம்மாவிடம் சென்று இந்த விற்களில் சிறந்தது சிவதுனுசா, திருமால் தனுசா என்று வினவினார்கள். பிரம்மா இவ்விருவரும் சண்டையிடும் போதே தெரியுமென கூற, சிவபெருமானும் திருமாலும் அந்த விற்களை வைத்து சண்டையிட்டுக் கொண்டார்கள்.

முடிவுராத சண்டையில் இருவரும் விலகிட தேவர்கள் வேண்டிக் கொண்டதால், சிவபெருமானும், திருமாலும் சண்டையே விடுத்தர். சிவபெருமான் தன்னுடைய வில்லை இந்திரனிடம் தந்தார். அந்த வில்லில் சிறிது விரிசல் இருப்பதைக் கண்டு இந்திரன் அதனைப் பயன்படுத்தாமல் வைத்திருந்தான். தன்னை பராமரிக்காமல் இந்திரனும், தேவர்களும் இருப்பதைக் கண்ட சிவதனுசு சிவபெருமானை நோக்கி தவமிருந்தது. அதன் பலனாக சிவபெருமானை மீண்டும் அடைந்த சிவதனுசு, தன்னை மதியாத தேவர்களை பழிதீர்ப்பேன் என சபதம் ஏற்றது.

 
சிவதனுசை உடைத்தமைக்காக ராமனிடம் சண்டையிடும் பரசுராமர்

தட்சனின் யாகத்தில் தாட்சாயிணி விழுந்து இறந்திட, சிவபெருமான் ஆவேசம் கொண்டு யாகத்தில் கலந்து கொண்ட தேவர்களைச் சிவதனுசினாலேயே தண்டித்தார். அதன் பிறகு தேவநாதன் என்பவரிடம் இந்த சிவதனுசை கொடுத்துவிட்டார்.

சிவதனுசை பராமரித்தும், பூஜித்தும் வந்ததால், தேவநாதனுக்கு ஜனகர் எனும் முனிவரைப் போன்ற ஜனகர் பிறந்ததார். ஜனகரும் சிவதனுசை போற்றி வந்தமையால், திருமகளே சீதாவாக அவருக்குப் பிறந்தார்.

சிவதனுசை சீதையால் மட்டுமே கையாள முடிந்தது. அதனால் ஜனகர் தன்னுடைய மகளின் சுயம்வரத்திற்கு சிவதனுசிற்கு நாண் ஏற்றுவதையே போட்டியாக வைத்திருந்தார். சிவதனுசின் பழமை காரணமாகவும், பயன்படுத்தப்படாமல் இருந்தமையாலும், இராமன் சிவதனுசில் நாண் ஏற்றும் போது தனுசு உடைந்தது.

சிவபெருமானுடைய தனுசை உடைத்தமைக்கு ராமனோடு சண்டையிட்டார் பரசுராமர். [2]

காண்கதொகு

காண்டீபம்

ஆதாரங்கள்தொகு

  1. "[http://m.dinakaran.com/adetail.asp?Nid=98 Dinakaran - சீதை ராமன் கல்யாணம��]".
  2. "சிவதனுசும் விஷ்ணுதனுசும்".

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ_தனுசு&oldid=2949809" இருந்து மீள்விக்கப்பட்டது