சி. எச். சேகர்

இந்திய அரசியல்வாதி

சி. எச். சேகர் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்காக, தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சி சார்பாக கும்மிடிப்பூண்டியிலிருந்து 2011 தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

சி. எச். சேகர்
பிறப்பு1979
சென்னை, தமிழ்நாடு
பணிஅரசியல்வாதி, தொழிலதிபர்
செயற்பாட்டுக்
காலம்
2004- இன்று

பின்னணி தொகு

சி. எச். சேகர் 1979ஆம் ஆண்டு  பிறந்தவர். இவர் ஒரு தொழில்முனைவர். இவர் பல்வேறு வணிகத்தொழில்கள் செய்து வருகிறார்.

அரசியல் வாழ்க்கை தொகு

சி. எச். சேகர் 2004ல் தன்னுடைய அரசியல் பயணத்தைத் துவக்கினார். பின்னர் 2005ல் துவங்கப்பட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியில் சேர்ந்தார். முதன்முறையாக அக்கட்சியின் சார்பாக 2006 தேர்தலில் போட்டியிட்டார். அப்பொழுது அவருக்கு வயது 27. அப்பொழுது அவர் அக்கட்சியின் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பில் இருந்தார்.

பெரிய கட்சிகளுடன் கூட்டணியில்லாமல் 23,000 வாக்குகள் பெற்றிருந்தார். இது அக்கட்சியின் வரலாற்றில் மிக உயர்ந்த சாதனையாகும். 2011 தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சி சார்பில் போட்டியிட்டு ஏறத்தாழ 100,000 வாக்குகள் பெற்றிருந்தார். இது அந்த தொகுதியின் 55% வாக்கு ஆகும். மேலும் இவர் தமக்கு எதிராகப் போட்டியிட்டவரைவிட 30,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.[2]

2016 தேர்தலில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் இவர் கே.எஸ். விஜயகுமார் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._எச்._சேகர்&oldid=3586905" இருந்து மீள்விக்கப்பட்டது