சி. எம். எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

சி. எம். எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (cms matric higher secondary school coimbatore) என்பது தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், கணபதியில் செயற்பட்டுவரும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகும்.[1] இங்கு 12 ஆம் வகுப்புவரை வகுப்புகள் உள்ளன. 1971ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த பள்ளியில், 2018 ஆண்டுவாக்கில் 3000க்கும் அதிகமான மாணவர்கள் பயிலுகின்றனர். இப்பள்ளி ஐஎஸ்ஓ தரச்சான்றை பெற்ற பள்ளியாகும். இந்தப்பள்ளியில் மாணவர்களின் திறனை வளர்க்கும் விதமாக நாட்டு நலப்பணித் திட்டம், சாரணர் இயக்கம், தேசிய மாணவர் படை, செஞ்சிலுவைச் சங்கம் போன்றவை செயல்பட்டு வருகின்றன. மேலும் இங்கு மின்னூலகம் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய குத்துச் சண்டை போட்டியில் இப்பள்ளியின் மாணவி முதலமைச்சர் கோப்பையை வென்றுள்ளார். இப்பள்ளியானது மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியை 25 ஆண்டுகளாக நடத்திவருகிறது.

சி. எம். எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
வகைசுயநிதி பள்ளி
உருவாக்கம்1971
அமைவிடம், ,
இணையதளம்[]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "210 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி". செய்தி. தினமலர். 5 சூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 31 அக்டோபர் 2018.