சி. ஏ. வைட்

சென்னை மாகாண அரசு தலைமை வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

சர் சார்லஸ் அர்னால்ட் வைட் (Sir Charles Arnold White) (1858 - 6 செப்டம்பர் 1931) என்பவர் ஒரு பிரித்தானிய வழக்கறிஞர் ஆவார். இவர் 1898 முதல் 1899 வரை மதராஸ் மாகாணத்தின் அரசு தலைமை வழக்கறிஞராகவும், 1899 முதல் 1914 வரை மதராஸ் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்.

சர் சார்லஸ் அர்னால்ட் வைட்
சென்னை மாகாண அரசுத் தலைமை வழக்குரைஞர்
பதவியில்
1898–1899
முன்னவர் வி. பாஷ்யம் ஐய்யங்கார் (செயல்)
பின்வந்தவர் வி. பாஷ்யம் ஐய்யங்கார் (செயல்)
மதராஸ் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
பதவியில்
1899–1914
முன்னவர் Sir Arthur John Hammond Collins
பின்வந்தவர் Sir John Edward Power Wallis
தனிநபர் தகவல்
பிறப்பு 1858
இறப்பு 6 செப்டம்பர் 1931
படித்த கல்வி நிறுவனங்கள் புதுக்கல்லூரி, ஆக்ஸ்போர்டு
பணி வழக்கறிஞர்
தொழில் அரசு தலைமை வழக்கறிஞர்
தலைமை நீதிபதி

ஆரம்பகால வாழ்க்கை தொகு

இவர் தாமஸ் ஜான் வைட் என்பவருக்கு மகனாக 1858 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஆக்ஸ்போர்டில் உள்ள புதுக் கல்லூரியில் படித்தார், அங்கு 1881 இல் தன் பட்டப்படிப்பை முடித்தார். 1883 ஆம் ஆண்டில் வைட் வழக்கறிஞராக பதிவுசெய்துகொண்டார்.

தொழில் தொகு

இவர் 1898 முதல் 1899 வரை மதராஸ் மகாணத்தின் அரசு தலைமை வழக்கறிஞராகவும், மதராஸ் சட்டமன்ற உறுப்பினராகவும் பனியாற்றினார். இவர் மதராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1899 இல் இவர் அப்பதவிகளை ராஜினாமா செய்தார். 1914 இல், இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவுக்கு வைட் நியமிக்கப்பட்டார். மேலும் இவர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார். [1]

மரியாதைகள் தொகு

வைட் 1900 இல் இளம் நைட் என கௌரவிக்கப்பட்டார்.

குறிப்புகள் தொகு

  1. "The Vice Chancellors". University of Madras.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._ஏ._வைட்&oldid=3582950" இருந்து மீள்விக்கப்பட்டது