இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழு

இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழு (Viceroy's Executive Council), பிரித்தானிய இந்தியாவின் வைஸ்ராயின் தலைமையில் செயல்படும் குழு ஆகும். அமைச்சரவைப் போன்ற இந்நிர்வாகக் குழு, பிரித்தானிய இந்தியாவின் அரசுத் துறைகள் தொடர்பாக, இந்தியத் தலைமை ஆளுநருக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கும். இந்நிர்வாகக் குழு 1861 ஆண்டின் இந்திய கவுன்சில்கள் சட்டத்தின் படி, அமைக்கப்பட்டது.

வரலாறு

தொகு

இந்திய அரசுச் சட்டம் 1858ன் படி, பிரித்தானிய இந்தியாவை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்த பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியை கலைத்து விட்டு, ஆட்சி அதிகாரத்தை, பிரித்தானியப் பேரரசுக்கு மாற்றப்பட்டது. பிரித்தானியப் பேரரசின் சார்பாக, 1858ல் இந்திய துணைக்கண்டத்தின் ஆட்சி நிர்வாகத்தை மேற்கொள்ள வைஸ்ராயை நியமித்தனர்.

1861 ஆண்டின் இந்திய கவுன்சில்கள் சட்டத்தின் படி, வங்காள மாகாண ஆளுநராக இருந்த இந்தியத் தலைமை ஆளுநர் எனப்படும் வைஸ்ராய்க்கு ஆட்சி நிர்வாகத்தில் ஆலோசனைகள் வழங்க ஐந்து பேர் கொண்ட அமைச்சரவை போன்ற நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. இவ்வைந்து உறுப்பினர்களில் மூவரை, பிரித்தானிய இந்தியாவின் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சரும்,[1], இருவரை பிரித்தானியப் பேரரசரும் நியமிப்பர்

இவ்வைந்து நிர்வாகக் குழ உறுப்பினர்கள் உள்துறை, படைத்துறை, வருவாய்த்துறை, நீதித்துறை மற்றும் நிதித்துறைகளை கண்காணிப்பர். வைஸ்ராய் தலைமையிலான நிர்வாகக் குழுக் கூட்டங்களின் போது, இந்தியத் தலைமைப் படைத் தலைவர் சிறப்பு உறுப்பினராக கலந்து கொள்வார். 1861 இந்திய கவுன்சில்கள் சட்டத்தின் படி, நிர்வாகக் குழு எடுக்கும் முடிவுகளில், தலைமை ஆளுநர் தேவையான மாற்றங்கள் செய்ய அதிகாரம் உள்ளது.

பின்னர் 1869ல் நிர்வாகக் குழுவின் ஐந்து உறுப்பினர்களையும் நியமிக்கும் அதிகாரம் பிரித்தானியப் பேரரசருக்கு மாற்றப்பட்டது. 1874ல் பொதுப்பணித் துறையை நிர்வகிக்க ஆறாவதாக ஒரு புதிய நிர்வாகக் குழு உறுப்பினர் நியமிக்கப்பட்டார்.

1909 இந்திய அரசுச் சட்டத்தின் படி, ஒரு இந்தியரை, வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் நியமிக்க, தலைமை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இதன் படி சத்யேந்திர பிரசன்னோ சின்ஹா என்ற இந்தியர் முதன்முதலாக நிர்வாகக் குழுவில் தலைமை ஆளுநரால் நியமிக்கப்பட்டார்.

1919 இந்திய அரசுச் சட்டத்தின் படி, இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் மூன்று இந்தியர்கள் நியமிக்கப்பட்டனர்.

தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் இந்தியர்கள் (1909 - 1940)

தொகு
  • சட்டத் துறை அமைச்சர்கள்: சத்யேந்திர பிரசன்னோ சின்ஹா (1909–1914), பி. எஸ். சிவசுவாமி ஐயர் (1912–1917), சையது அலி இமாம், முகமது சபி தியோபந்தி (1924–1928), தேஜ் பகதூர் சப்ரு (1920–1923), சதீஸ் ரஞ்சன் தாஸ், வீரேஜேந்திர மிட்டர், (1931–1934), நிருபேந்திர நாத் சர்க்கார் (1934–1939), பிபின் பிகாரி கோஷ் (1933), நளினி ரஞ்சன் சட்டர்ஜி[2]
  • சி. சங்கரன் நாயர் (1915–1919): கல்வித் துறை
  • முகமது சபி: கல்வித் துறை (1919–1924)
  • பி. என். சர்மா (1920–1925): வருவாய் மற்றும் வேளாண்மை
  • புபேந்திரநாத் மித்திரா : தொழில்கள் மற்றும் தொழிலாளர் துறை
  • நரசிம்ம சிந்தாமணி கேல்கர் (1924–1929)
  • முகமது அபிபுல்லா (1925–1930): கல்வி, சுகாதாரம் மற்றும் நில நிர்வாகம்
  • பைசல் உசைன் (1930 – 1935)
  • சி. பி. இராமசாமி அய்யர் சட்டம் (1931–1932), வணிகம் (1932), செய்தித் தொடர்பு (1942)
  • கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு (1934–1937)
  • முகமது சபருல்லா கான் (1935–1941): வணிகம் (–1939), சட்டம் (1939–), இரயில்வே, தொழில்கள் மற்றும் தொழிலாளர் துறை
  • ஆற்காடு இராமசாமி முதலியார்: வணிகம், தொழிலாளர் துறை (1939–1941), உணவு வழங்கல் துறை (1943)
  • சர் குன்வர் ஜெகதீஷ் பிரசாத்: சுகாதாரம், கல்வி மற்றும் நிலநிர்வாகம்
  • கிரிஜா சங்கர் வாஜ்பாய் (1940): சுகாதாரம்ஆ

நிர்வாகக் குழு விரிவாக்கம் 1941 மற்றும் 1942

தொகு

8 ஆகஸ்டு 1940ல் இந்தியத் தலைமை ஆளுநாக இருந்த விக்டர் ஹோப், இரண்டாம் லின்லித்கொ பிரபு என்பவர், தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் கூடுதல் இந்தியர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, இந்திய தேசிய காங்கிரசு, அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சி மற்றும் இந்து மகாசபை போன்ற அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை

இரண்டாம் உலகப் போரின் போது, போர் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, முப்பது பேர் கொண்ட தேசியப் பாதுகாப்புக் குழு நிறுவப்பட்டது. இக்குழுவில் சட்டமன்றங்கள் கொண்ட நான்கு இந்திய மாகாணங்கள் மற்றும் சுதேச சமஸ்தானங்களின் சார்பாக முப்பது உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவில், 50 விழுக்காடு இசுலாமியர்கள் கொண்டாதாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை, அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் முகமது அலி ஜின்னா முன் வைத்தார். ஆனால் இக்கோரிக்கையை தலைமை ஆளுநர் ஏற்கவில்லை.

2 சூலை 1942ல் வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை பனிரெண்டிலிருந்து 15 ஆக உயர்த்தப்பட்டது.

இந்தியக் குடிமைப் பணி அதிகாரியும், இலண்டனில் தூதரக அதிகாரியாக இருந்த சர் மாலிக் பெரேஸ் கான் நூன் என்பவரை, தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் படைத்துறை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

சர் இராமசாமி முதலியார் மற்றும் ஜாம்நகர் மன்னர் திக்விஜய்சிங் ரஞ்சித்சிங் ஆகியோர் பிரித்தானியப் பேரரசின் போர்க்குழுவில், பிரித்தானிய இந்தியாவின் சார்பாக பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டனர்.

வைஸ்ராய் தலைமையிலான நிர்வாகக் குழு உறுப்பினர்கள்;[3][4]

துறை பெயர் பதவிக் காலம்
வைஸ்ராய் மற்றும் இந்தியத் தலைமை ஆளுநர் விக்டர் ஹோப், இரண்டாம் லின்லித்கொ பிரபு 18 ஏப்ரல் 1936 – 1 அக்டோபர் 1943
ஆர்ச்சிபால்ட் வேவல் 1 அக்டோபர், 1943 – 21 பிப்ரவரி 1947
இந்தியத் தலைமைப் படைத்தலைவர் ஜெனரல் ஆர்ச்சிபால்ட் வேவல் 5 சூலை 1941 – 5 சனவரி 1942
ஜெனரல் சர் ஆலன் ஹர்ட்லி 5 சனவரி 1942 – 7 மார்ச் 1942
பீல்டு மார்ஷல் ஆர்ச்சிபால்ட் வேவல் 7 மார்ச் 1942 – 20 சூன் 1943
ஜெனரல் சர் கிளௌடு அச்சின்லெக் 20 சூன் 1943 – 21 பிப்ரவரி 1947
உள்துறை சர் ரெஜினால்டு மேக்ஸ்வெல் 1941-1944
சர் ராபர்ட் பிரான்சிஸ் மூடி 1944-1946
நிதித் துறை சர் ஜெரோமி ராய்ஸ்மன் 1941-1946
பாதுகாப்பு சர் மாலிக் பெரோஸ் கான் நூன் 1942-1944
உள்துறை டாக்டர். எட்புகாந்தி ராகவேந்திரா ராவ் 1941-1942
சர் ஜூவாலா பிரசாத் ஸ்ரீவஸ்தவா 1942-1943
சட்டம் சர் சையது சுல்தான் அகமது 1941-1943
அசோக் குமார் ராய் 1943-1946
செய்தித் துறை சர் அக்பர் ஹைதரி 1941-1942
சர் சுல்தான் அமகது 1943-
தகவல் தொடர்புகள் சர் ஆண்ட்ரூஒ கிளவ் 1941
விநியோகம் சர் ஹோமி மூடி 1941-1942
சர் ஆற்காடு ராமசாமி முதலியார் 1943
வணிகம் சர் ஆற்காடு இராமசாமி முதலியார் 1941
நளினி ரஞ்சன் சர்க்கார் 1942
சுகாதாரம், கல்வி மற்றும் நிலநிர்வாகம் நளினி ரஞ்சன் சர்க்கார் 1941
ஜோகிந்திர சிங் 1942-1946
தொழிலாளர் துறை பெரோஸ் கான் நூன் 1941
அம்பேத்கர் 1942-1946
வெளியுறவு மற்றும் பொதுவாலய உறவுகள் மாதவ சிறீஹரி 1941-1943
நாராயணன் பாஸ்கர் கரே 1943-1946
பிரித்தானிய பிரதம அமைச்சர் சர்ச்சிலின் போர்க்குழுவில் இந்தியப் பிரதிநிதிகள் ஆற்காடு இராமசாமி முதலியார் 1942-1944
பெரோஸ் கான் நூன் 1944-1945
போர் போக்குவரத்துகள் இ. சி. பெந்தால் 1942-1946
அஞ்சல் மற்றும் வானூர்திகள் முகமது உஸ்மான் 1942-1946
குருநாத் வெங்கடேஷ் பெவூர் 1946
உணவு சர் சுவாலா பிரசாத் சிறீவஸ்தவா 1943-1946
வணிகம், தொழில்கள், உணவு வழங்கள் முகம்மது அஜீஸ்சுல் ஹக் 1943-1945
போருக்குப் பிந்தைய கட்டமப்புத் துறை அர்தேஷ்சிர் தலால் 1944-1945

இடைக்கால அரசு

தொகு

1946ல் அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழுவினர், இந்தியா இடைக்கால அரசில், வைஸ்ராய் மற்றும் தலைமைப் படைத் தலைவர் தவிர பிற துறை அமைச்சர்கள் அனைவரும் இந்தியர்களாக மட்டும் இருக்க வேண்டும் என பிரித்தானியப் பேரரசிடம் வலியுறுத்தினர்.

இதன் படி, வைஸ்ராய் வேவல் பிரபு, இந்தியர்கள் அடங்கிய 14 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை அமைக்க இந்திய அரசியல் கட்சிக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்திய இடைக்கால அரசு 2 செப்டம்பர் 1946 முதல் செயல்படத் துவங்கியது. இடைக்கால அரசில் இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினர்கள் மட்டும் பதவியேற்றனர். அகில இந்திய முஸ்லீக் கட்சி 26 அக்டோபர் 1946 வரை இடைக்கால அரசில் பங்கேற்க மறுத்தனர். இந்தியப் பிரிவினைக்குப் பின் இடைக்கால அரசு முடக்கப்பட்டது.

15 ஆகஸ்டு 1947 அன்று இடைக்கால அரசின் அதிகாரங்கள் இந்திய ஒன்றியம் மற்றும் பாகிஸ்தான் ஒன்றியத்துடன் மாற்றப்பட்டது.

இடைக்கால அரசின் துறைகளும், அமைச்சர்களும்

தொகு
துறைகள் பெயர் அரசியல் கட்சி
வைஸ்ராய் & இந்தியத் தலைமை ஆளுநர்
ஆர்ச்சிபால்ட் வேவல்

மவுண்ட்பேட்டன் பிரபு

யாருமில்லை
இந்திய தலைமைப் படைத்தலைவர் ஜெனரல் சர் கிளௌடி ஆச்சின்லெக் யாருமில்லை
நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர்

வெளியுறவுத் துறை & பொதுநல வாலாயம் உறவுகள்

ஜவகர்லால் நேரு இந்திய தேசிய காங்கிரசு
உள்துறை

செய்தி & ஒலிபரப்பு

வல்லபாய் படேல் இந்திய தேசிய காங்கிரசு
பாதுகாப்பு பல்தேவ் சிங் அகாலி தளம்
தொழில்கள் மற்றும் வழங்கல் துறை ஜான் மத்தாய் இந்திய தேசிய காங்கிரசு
கல்வி இராசகோபாலாச்சாரி இந்திய தேசிய காங்கிரசு
பொதுப்பணிகள், சுரங்கங்கள், மின்சாரம் சரத் சந்திர போசு இந்திய தேசிய காங்கிரசு
பொதுப்பணிகள், சுரங்கங்கள், மின்சாரம் சி. எச். பாபா இந்திய தேசிய காங்கிரசு
உணவு மற்றும் வேளாண்மை இராசேந்திர பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு
இரயில்வே மற்றும் போக்குவர்த்து ஆசப் அலி இந்திய தேசிய காங்கிரசு
தொழிலாளர் துறை ஜெகசீவன்ராம்|அம்பேத்கர் தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு
நிதித் துறை லியாகத் அலி கான் அகில இந்திய முசுலிம் லீக்
வணிகம் இப்ராகிம் இஸ்மாயில் சுந்திரிகர் அகில இந்திய முசுலிம் லீக்
சுகாதாரம் கஜன்பர் அலி கான் அகில இந்திய முசுலிம் லீக்
அஞ்சல் மற்றும் வானூர்தி அப்துர் ரப் நிஷ்தர் அகில இந்திய முசுலிம் லீக்
சட்டம் ஜோகிந்திர நாத் மண்டல் அகில இந்திய முசுலிம் லீக்

மேற்கோள்கள்

தொகு
  1. Secretary of State for India
  2. "Nalini Ranjan's Portrait Unveiled". Statesman. 24 December 2001. 
  3. Constitutional Schemes and Political Development in India. p. 21.
  4. "THE VICEROY'S EXECUTIVE COUNCIL IS EXPANDED". The Straits Times. 23 July 1941. http://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/straitstimes19410723-1.2.34.aspx. பார்த்த நாள்: 8 September 2014. 

இதனையும் காண்க

தொகு