பி. எஸ். சிவசுவாமி ஐயர்

இந்திய வழக்கறிஞர்

சர் பழமாநேரி சுந்தரம் சிவசுவாமி ஐயர் (Sir P. S. Sivaswami Iyer, 7 பெப்ரவரி 1864 – 5 நவம்பர் 1946)[1] என்பவர் பிரபலமான இந்திய வழக்கறிஞரும், நிருவாகியும், அரசியல்வாதியும் ஆவார். இவர் சென்னை மாகாணத் தலைமை வழக்குரைஞராகப் பணியாற்றியவர்.

பழமாநேரி சுந்தரம் சிவசுவாமி ஐயர்
சென்னை சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில்
1922–1923
தலைமை ஆளுநர்ரூஃபுசு ஐசாக்
சென்னை மாகாண ஆளுநர் நிர்வாகப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1911–1917
ஆளுநர்சர் மறி ஹேமிக் (பதில்),
ஜான் சிங்கிளையர்
சென்னை மாகாண அரசுத் தலைமை வழக்குரைஞர்
பதவியில்
1907–1912
பின்னவர்எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1864-02-07)7 பெப்ரவரி 1864
பழமாநேரி, தஞ்சாவூர் மாவட்டம், சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு5 நவம்பர் 1946(1946-11-05) (அகவை 82)
மயிலாப்பூர், சென்னை
துணைவர்கல்யாணி (இ. 1939)
பெற்றோர்சுந்தரம் ஐயர் (இ. 1893),
சுப்புலட்சுமி (இ. 1922)
பணிஅரசியல்வாதி, வழக்கறிஞர், நிருவாகி

ஆரம்ப வாழ்க்கை

தொகு
 
சிவசுவாமி ஐயர்

சிவசுவாமி ஐயர் தஞ்சாவூர் மாவட்டம், பழமார்நேரி கிராமத்தில் சுந்தரம் ஐயர், சுப்புலட்சுமி ஆகியோருக்கு 1864 பெப்ரவரி 7 இல் பிறந்தவர். எஸ். பி. பள்ளியில் ஆரம்பக் கல்வியைக் கற்று, பின்னர் பானம்புசாவடி உயர்நிலைப்பள்ளியில் 1877 இல் மெட்ரிக்குலேசன் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியிலும், பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் பயின்று 1882 இல் சமசுகிருதம், வரலாறு ஆகியன பயின்று முதல்வகுப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[2] சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று 1885 இல் வழக்குரைஞராகப் பணியாற்ற ஆரம்பித்தார்.

குடும்பம்

தொகு

சிவசுவாமி ஐயரின் தந்தை பழமார்நேரி சுந்தரம் ஐயர் ஆவார். தஞ்சையில் உள்ள எஸ். பி. ஜி. மிஷன் உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிகுலேசன் படித்தார். தஞ்சை வழக்கறிஞர் சங்கத்தில் வழக்கறிஞராகச் சேருவதற்கு முன்பு, பட்டுக்கோட்டையில் உள்ள மிஷன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். சுந்தரத்தின் மனைவி சுபலட்சுமி பக்கத்து கிராமமான மரூரைச் சேர்ந்தவர். சிவசுவாமிக்கு சந்திரசேகரன், சீதாராமன் மற்றும் சுப்பிரமணியன் என்ற தம்பிகளும், தர்மாம்பாள் மற்றும் சுந்தரி என்ற இரண்டு சகோதரிகளும் இருந்தனர்.

வழக்குரைஞராக

தொகு

சிவசுவாமி ஐயர் வழக்குரைஞராக பணியாற்றினார். 1904 மே 12 இல் இவர் ஆளுநரின் நிறைவேற்றுப் பேரவையில் மேலதிக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] சென்னை சட்டமன்றத்தில் 1904 முதல் 1907 அக்டோபர் 25 வரை சட்டமன்ற உறுப்பினரானார்.[4] சென்னை மாகாண தலைமை அரசு வழக்குரைஞராகவும் பணியாற்றியுள்ளார்.[5]

சிவசுவாமி ஐயர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேலவை உறுப்பினராக 1898 இல் நியமிக்கப்பட்டு 1916 முதல் 1918 வரை அதன் துணைவேந்தராகவும், 1918 முதல் 1919 வரை பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார்..[5]

அரசியலில்

தொகு

1912 இல் அரசியலில் இறங்கினார். 1912 முதல் 1917 வரை சென்னை மாகாண ஆளுநரின் நிறைவேற்று சபையில் உறுப்பினராக இருந்தார்.[6] முதலாம் உலகப் போர்க் காலத்தில், பிரித்தானியாவுக்கு ஆதரவாக இந்தியத் தொண்டர் இயக்கத்துக்கு ஆதரவளித்தார்.

1922 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக நாடுகள் சங்கத்தின் மூன்றாவது கூட்டத்தொடரில் சிவசுவாமி பங்குபற்றினார்.[7]

இறப்பு

தொகு

1931 ஆம் ஆண்டில், அவர் புதிய இந்திய இராணுவக் கல்லூரிக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தனது இறுதிக் காலத்தில், துணைக்கண்டத்தைப் பிரிக்கும் எந்தவொரு முயற்சியையும் அவர் கடுமையாக எதிர்த்தார்.

சிவசுவாமி ஐயர் 1946 நவம்பர் 5 ஆம் தேதி தனது 82 ஆவது வயதில் தனது சென்னை வீட்டில் இறந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, பெண்கள் பள்ளிக்கு அவரது நினைவாக, அவரது பெயர் சூட்டப்பட்டது.

கொள்கை மற்றும் விமர்சனம்

தொகு

சிவசுவாமி ஐயர் ஒரு தீவிர வாசகர் மற்றும் கலை ஆர்வலர் ஆவார்.[8] அவர் பெண்கள் கல்வியின் வலுவான ஆதரவாளராக இருந்தார், மேலும் இந்த விஷயத்தில் பெரும் சீர்திருத்தங்களை ஆதரித்தார். அவர் இராணுவ விஷயங்களில் சிறப்பு ஆர்வம் காட்டினார் மற்றும் சாண்ட்ஹர்ஸ்ட் மாதிரி ஒரு உள்நாட்டு இராணுவ அகாடமியை நிறுவ அமைக்கப்பட்ட, இந்திய இராணுவ கல்லூரி குழுவின் உறுப்பினராக பணியாற்றினார்.

சிவசுவாமி ஐயர் சமசுகிருதத்தின் மீதான புலமைக்கும், அந்த மொழியின் மீதான பற்றுக்கும் பெயர் பெற்றவர்.[9]

கல்வி நிலையங்கள்

தொகு

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் இவருடைய பெயரில் சர் சிவசுவாமி பாலவித்யாலய மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சிவசுவாமி ஐயர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிவசுவாமி ஐயர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் செயல்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. சு. முத்தையா (19-07-2004). "Of princes and co-eds". The Hindu இம் மூலத்தில் இருந்து 2004-09-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040917062134/http://www.hindu.com/mp/2004/07/19/stories/2004071900140300.htm. 
  2. Cyclopedia Publishing Co. (1992). The Cyclopedia of India: biographical, historical, administrative, commercial, Volume 3. Calcutta: Book Traders. p. 234.
  3. India Office List, 1903
  4. Markandan, K. C. (1964). Madras Legislative Council: Its Constitution and Working Between 1861 and 1909: Being a Report, Submitted to the Madras University, as a Fellow in the Politics Department Between October 1952 and October 1953. S. Chand. p. 53.
  5. 5.0 5.1 Govind Ballabha Pant; Balaram Nanda (1995). Selected works of Govind Ballabh Pant, Volume 4. Oxford University Press. p. 382. ISBN 978-0-19-563674-1.
  6. Majumdar, Bimanbehari (1967). Congress and Congressmen in the Pre-Gandhian Era 1885-1917. p. 311.
  7. S. Muthiah (4 July 2004). "Fate of old books". The Hindu இம் மூலத்தில் இருந்து 6 நவம்பர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041106184227/http://www.hindu.com/mp/2004/07/05/stories/2004070500110300.htm. 
  8. Fate of old books,The Hindu,5 July 2004
  9. Gallagher, John; Gordon Johnson; Anil Seal (1973). Locality, Province and Nation: Essays on Indian Politics 1870 to 1940. CUP Archive. pp. 207. ISBN 978-0-521-09811-3.

வெளி இணைப்புகள்

தொகு
முன்னர் பனாரசு இந்து பல்கலைக்கழகம்-துணைவேந்தர்
13 ஏப்ரல் 1918 - 08 மே 1919
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எஸ்._சிவசுவாமி_ஐயர்&oldid=4256356" இலிருந்து மீள்விக்கப்பட்டது