சுந்தர் லால்
ராவ் பகதூர் சர் சுந்தர் லால் (Sunder Lal) என்பவர் இந்தியக் கல்வியாளர் ஆவர். இவர் 21 மே 1857 அன்று நைனித்தாலுக்கு அருகிலுள்ள ஜஸ்பூரில் பிறந்தார்.
ராவ் பகதூர் சுந்தர் லால் | |
---|---|
சுந்தர் லாலின் படம் | |
1வது துணைவேந்தர்-பனாரசு இந்து பல்கலைக்கழகம்]] | |
பதவியில் 1 ஏப்ரல் 1916 – 1918 | |
முன்னையவர் | புதிய பதவி |
பின்னவர் | பி. எஸ். சிவசுவாமி ஐயர் |
துணைவேந்தர்-அலகாபாத் பல்கலைக்கழகம் | |
பதவியில் 1912–1916 | |
வழக்கறிஞர்-அலகாபாத் உயர் நீதிமன்றம் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஜஸ்பூர், வடமேற்கு மாகாணங்கள், இந்தியாவில் கம்பெனி ஆட்சி (now in உத்தராகண்டம், India) | 21 மே 1857
இறப்பு | 13 பெப்ரவரி 1918 பிரயாக்ராஜ், (உத்தரப் பிரதேசம், இந்தியா) | (அகவை 60)
முன்னாள் கல்லூரி | முயிர் மத்திய கல்லூரி |
வேலை | நடுவர் கல்விநிர்வாகி |
அறியப்படுவது | நிறுவன துணைவேந்தர்]], பனாரசு இந்து பல்கலைக்கழகம் |
1876ஆம் ஆண்டில், லால் பிரயாக்ராஜில் உள்ள முயிர் மத்தியக் கல்லூரியில் சேர்ந்தார். இக்கல்லூரி அகசுதசு ஆரிசன் தலைமையில் செயல்பட்டது. இங்கு இளங்கலை பட்டப்படிப்பினை முடித்த பண்டித சுந்தர் லால் 1880ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றத்தின் வக்கீல் தேர்வில் தேர்ச்சி பெற்றார். மேலும் 1880 திசம்பர் 21 அன்று வக்கீல் பட்டம் பெற்றார். அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றினார். 1896ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றம் இவருக்கு வழக்கறிஞராகப் பதவி உயர்வு வழங்கியது.
1905ஆம் ஆண்டில் இவருக்கு 'ராவ் பகதூர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது. 1907இல் சி. ஐ. ஈ. ஆக நியமிக்கப்பட்டார். 1909ஆம் ஆண்டில் இலக்னோ நீதித்துறை ஆணையர் நீதிமன்றத்தின் இருக்கையில் ஒரு சில மாதங்களுக்குப் பணியாற்றும் வாய்ப்பினை ஏற்றுக்கொண்டார். 1914ஆம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகக் குறுகிய காலத்திற்குப் பணியாற்றினார்.
சட்ட அறிக்கையிடல் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அலகாபாத்-வக்கில்களைப் பிரதிநிதித்துவப்படுத்த அலகாபாத் நீதிமன்ற வாரிய உறுப்பினர், 1893-வழக்கறிஞராகச் சேர்ந்தார்.
1906ஆம் ஆண்டில், அலகாபாத் பல்கலைக்கழகத்தின் முதல் இந்தியத் துணைவேந்தராக ஆனார். 1912 மற்றும் 1916ஆம் ஆண்டுகளில் இவர் மீண்டும் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
1916ஆம் ஆண்டில், இவர் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் நிறுவன துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். இப்பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மருத்துவமனை இவர் பெயரால், சர் சுந்தர் லால் மருத்துவமனை என அழைக்கப்படுகிறது.[1]
1917 பிப்ரவரி 21 அன்று, சுந்தர் லால் ஒரு வீரத்திருத்தகை பட்டத்தினைப் பெற்றார். இவர் தனது 61வது வயதில் அலகாபாத்தில் பிப்ரவரி 13,1918 அன்று காலமானார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Student Amenities". Banaras Hindu University. Archived from the original on 28 March 2009. பார்க்கப்பட்ட நாள் 2012-06-05.