சி. கே. ஜாபர் செரீப்

இந்திய அரசியல்வாதி
(சி. கே. ஜாபர் ஷெரீப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சி. கே. ஜாபர் செரீப் (C. K. Jaffer Sharief, 3 நவம்பர் 1933 – 25 நவம்பர் 2018)[1]) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்திய அரசின் அமைச்சரவையில் இரயில்வேத் துறை அமைச்சராக 1991 முதல் 1995 முடிய பதவி வகித்தவர்.[2]

சி. கே. ஜாபர் செரீப்
இந்திய இரயில்வே துறை அமைச்சர்
பதவியில்
21 சூன் 1991 – 16 அக்டோபர் 1995
பிரதமர்பி. வி. நரசிம்ம ராவ்
முன்னையவர்ஞானேஸ்வர் மிஸ்ரா
பின்னவர்இராம் விலாசு பாசுவான்
[[இந்தியர் நாடாளுமன்றம்]]
for பெங்களூர் வடக்கு மக்களவைத் தொகுதி
பதவியில்
1977–1996
முன்னையவர்கே. அனுமந்தையா
பின்னவர்சி. நாராயணசாமி
பதவியில்
1998–2004
முன்னையவர்சி. நாராயணசாமி
பின்னவர்எச். டி. சாங்கிலியானா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1933-11-03)3 நவம்பர் 1933
சித்ரதுர்கா, மைசூர் அரசு
(இன்றைய கருநாடகம்)
இறப்பு25 நவம்பர் 2018(2018-11-25) (அகவை 85)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்அமீனா பீவி
பிள்ளைகள்4

அரசியல் வாழ்க்கை தொகு

இந்திய காங்கிரஸ் கட்சியின் கர்நாடகா மாநிலத் தலைவர் நிஜலிங்கப்பா தலைமையில் அரசியல் வாழ்க்கையைத் துவக்கியவர் ஜாபர் செரீப். காங்கிரசு கட்சி இரண்டாக பிளவுபட்ட போது, ஜாபர் செரீப் இந்திராகாந்தி தலைமையிலான இந்திரா காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்.

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் பதவியில் தொகு

இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக எட்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இந்திய அரசின் அமைச்சர் பதவியில் தொகு

பெங்களூர் வடக்கு மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜாபர் செரீப், பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் இரயில்வேத் துறை அமைச்சராக 21 சூன் 1991 முதல் 16 அக்டோபர் 1995 முடிய பதவி வகித்தவர்.

ஏப்ரல் 2016-இல் ஜாபர் செரீப் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகினார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Aiyappa, Manu (25 November 2018). "Former Railway minister CK Jaffer Sheriff dead". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 25 November 2018. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "Karnataka / Hassan News : Leaders' meeting in Hassan". The Hindu. 22 September 2007. Archived from the original on 2011-06-04. பார்க்கப்பட்ட நாள் 2012-07-04. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. Karnataka poll shocker: C K Jaffer Sharief quits Congress

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கே._ஜாபர்_செரீப்&oldid=3553678" இலிருந்து மீள்விக்கப்பட்டது