சி. கோவிந்தசாமி
இந்திய அரசியல்வாதி
சி. கோவிந்தசாமி (C. Govindasamy) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1989 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் திருப்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, இந்திய பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
திராவிட முன்னேற்றக் கழகம், கருணாநிதி தலைமையிலான மாநில அரசாங்கத்தின் நற்செயல்களை பாராட்டியதற்காக, கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ததால், 2010- ஆம் ஆண்டு இந்திய பொதுவுடைமைக் கட்சியிலிருந்து இவர் நீக்கப்பட்டார். [3]
ஏப்ரல் 2011-ல் நடைபெற்ற தேர்தல்லில் திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் எம். எஸ். எம். ஆனந்தனிடம் தோல்வியடைந்தார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 2006 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ News Coverage in The Hindu
- ↑ "2011 Tamilnadu Election Results for Tirupur". Archived from the original on 16 May 2011. பார்க்கப்பட்ட நாள் 11 June 2011.