சி. கோவிந்த பணிக்கர்
சி. கோவிந்த பணிக்கர் (C. Govinda Panicker)(1928 - 9 மே 2004) சிஜி பணிக்கர் என்றும் அழைக்கப்படும் இவர் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். இவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக 3வது மற்றும் 4வது கேரள சட்டமன்றத்தில் ஸ்ரீகிருஷ்ணாபுரம் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 1965ல் ஸ்ரீகிருஷ்ணாபுரம் தொகுதி உருவானதில் இருந்து முதல் மூன்று தேர்தல்களிலும் பணிக்கர் வெற்றி பெற்றுள்ளார். 1965, 1967 மற்றும் 1971 தேர்தல்களில் கேரள சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சி. கோவிந்த பணிக்கர் | |
---|---|
கேரள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1965–1977 | |
பின்னவர் | கே. சுகுமாரனுண்ணி |
தொகுதி | ஸ்ரீகிருஷ்ணாபுரம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1928 பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 9 மே 2004 பாலக்காடு, கேரளம் | (அகவை 75–76)
துணைவர் | கே. பி. பாருக்குட்டி பிசராசியர் |
பிள்ளைகள் | 1 |
சுயசரிதை
தொகுசி. கோவிந்த பணிக்கர் 1928 இல் பிறந்தார்.[1] இவருக்கும் இவரது மனைவி கே. பி. பாருக்குட்டி பிசராசியருக்கும் ஒரு மகள் உள்ளார்.[2] பணிக்கர் மே 9, 2004 அன்று கேரளாவின் பாலக்காட்டில் இறந்தார்.
அரசியல் வாழ்க்கை
தொகுஇந்திய விடுதலை இயக்கப் போராட்டத்தில் தீவிர உறுப்பினராக இருந்த கோவிந்த பணிக்கர் 1949 இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார்.[2] 1952 இல் காங்கிரசு கட்சியை விட்டு வெளியேறி இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் 1964 இல் கட்சியின் பிளவுக்குப் பிறகு, இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினரானார்.[2] 1986 ஆம் ஆண்டு பொதுவுடைமை மார்க்சிஸ்ட் கட்சி (சிஎம்பி) உருவாக்கப்பட்டபோது அதில் சேர்ந்தர். அங்கு கட்சியின் பாலக்காடு மாவட்டச் செயலாளராகப் பணியாற்றினார். பாலகாடு மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றிய பணிக்கர், மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களை அமைப்பதில் தீவிரமாக இருந்தார். [2]
தேர்தல் அரசியல்
தொகுகோவிந்த பணிக்கர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக 3வது மற்றும் 4வது கேரள சட்டமன்றத்தில் ஸ்ரீகிருஷ்ணாபுரம் சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2]