சி. சோமிதரன்
ஊடகவியலாளர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சி. சோமிதரன் (பி. மே 13, 1981, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்) இலங்கையைச் சேர்ந்த ஓர் ஊடகவியலாளரும் ஆவணப்பட இயக்குனரும் ஆவார். மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கல்வி கற்ற இவர் ஊடகப்பணியை இலங்கை வானொலியில் தொடங்கிப் பின்னர் தினக்குரல் யாழ்ப்பாணப் பதிப்பில் உதவியாசிரியராகவும் Northeastern Herald இதழிலும் பணியாற்றினார். பிபிசியினுடைய ஆவணப்பட முயற்சிகளிலும் பங்கெடுத்தார்.
இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான மூன்று ஆவணப்படங்களை இயக்கியுள்ள இவர் சூழலியல், மனித உரிமைகள் தொடர்பான ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார்.
சென்னை லோயலா கல்லூரியில் காட்சித் தொடர்பியல், திரைப்பட உயர்கல்வியைப் பெற்ற இவர் தற்போது சென்னையில் வசிக்கிறார்.
இயக்கிய ஆவணப்படங்கள்
தொகு- எரியும் நினைவுகள் (யாழ் நூலக எரிப்பைப் பற்றிய ஆவணப்படம்)
- Mullaitivu Saga (2009 ஈழ இறுதிப் போர் பற்றிய ஆவணம்)
- வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி (இலங்கைத் தமிழரின் அரசியல் வரலாற்றைக் கூறும் 165 நிமிட ஆவணப்படம்)