சி. டி. குரியன்

இந்திய பொருளியலாளர்

சி. டி. கே. என்று பிரபலமாக அறியப்படும் கிறிஸ்டோபர் தாமஸ் குரியன் (C. T. Kurien, 2 யூலை 1931 – 23 யூலை 2024) என்பவர் இந்திய பொருளியலாளர் ஆவர். இவர் கருநாடகத்தின், பெங்களூரில், பொருளியல் பேராசிரியராக இருந்தார். பொருளாதாரம் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் இவர் மைய-இடது அரசியல் சித்தாந்தம் கொண்டவராக வரையறுக்கப்பட்டுள்ளார்.[1]

சி. டி. குரியன்
பிறப்பு(1931-07-02)2 சூலை 1931
பிரித்தானிய இந்தியா
இறப்பு23 சூலை 2024(2024-07-23) (அகவை 93)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
மற்ற பெயர்கள்சிடிகே
குடியுரிமைஇந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்
பணி
  • பொருளாதார நிபுணர்
அறியப்படுவதுவறுமையைப் புரிந்துகொள்வதற்கும் ஒழிப்பதற்கும் பொருளாதாரத்தில் ஆழ்ந்த கவனம் செலுத்தி வாழ்நாள் முழுவதும் பணியாற்றியது
குறிப்பிடத்தக்க படைப்புகள்Wealth and Illfare, Economics of Real Life

துவக்ககால வாழ்க்கை

தொகு

1931, யூலை, 2 அன்று பிறந்த[2], குரியன் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்றார். 1953 இல் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்திற்குச் சென்றார் அங்கு 1962 இல் முனைவர் பட்டம் பெற்றார்.[3]

தொழில்

தொகு

இந்தியா திரும்பிய பிறகு சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பணிக்குச் சேர்ந்த இவர், 1962 மற்றும் 1978 இக்கு இடையில் பொருளாதாரத் துறையின் பேராசிரியராகவும் தலைவராகவும் இருந்தார். குரியன் 1975 முதல் 1977 வரை பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய உறுப்பினராக இருந்தார். 1978 ஆம் ஆண்டில் இவர் சமூக அறிவியல் ஆராய்ச்சிக்கான தேசிய மையமான சென்னை வளர்ச்சி ஆராய்சி நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார், பத்து ஆண்டுகள் இந்தப் பதவியை வகித்தார். 1992 முதல் 1994 வரை இந்திய சமூக அறிவியல் கழகத்தின் தேசிய உறுப்பினராக இருந்தார். இவர் 1997 முதல் 2003 வரை, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருந்தார். பின்னர் இவர் கல்விசார் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.[3]

குரியன் 1996 இல் பல்கலைக்கழக மானியக் குழுவின் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார். இவர் 1999 இல் மால்கம் மற்றும் எலிசபெத் ஆதிசேசையா அறக்கட்டளையின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். 2002ல் இந்திய பொருளாதார சங்கத்தின் தலைவராக இருந்தார். 2003 ஆம் ஆண்டில் சமய உரையாடலுக்கான பெங்களூர் முன்முயற்சிக்கு டாக்டர் ஸ்டான்லி சமர்த்தா நினைவு உரையை: "சமூக நல்லிணக்கம் - ஒரு சமூகக் கண்ணோட்டம்" என்ற தலைப்பில் வழங்கினார்.[4] 2012 ஆம் ஆண்டு வரை இவர் கருநாடகத்தில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான கல்விக் கழகக் (ISEC) குழுவில் உறுப்பினராக இருந்தார்.[5] இவரது மிக அண்மைய நூலான "செல்வம் மற்றும் நோய் - உண்மையான வாழ்க்கை சார்ந்த பொருளாதாரத்திற்கான ஒரு பயணம்" 2012 இல் வெளியிடப்பட்டது, அப்போது ஆசிரியருக்கு 80 வயது.

இறப்பு

தொகு

குரியன் 23 யூலை 2024 அன்று தனது 93 வயதில் இறந்தார்.[6]

எழுதிய நூல்கள்

தொகு
  • C. T. Kurien (1966). Our five year plans. Christian Institute for the Study of Religion and Society. p. 199.
  • C. T. Kurien (1969). Indian economic crisis: a diagnostic study. Asia Pub. House. p. 123.
  • C. T. Kurien (1970). A theoretical approach to the Indian economy. Asia Publishing House. p. 64.
  • C. T. Kurien (1974). Poverty and development. Christian Literature Society. p. 209.
  • C. T. Kurien (1978). Poverty, planning, and social transformation. Allied. p. 174.
  • C. T. Kurien; Josef James (1979). Economic change in Tamil Nadu, 1960–1970: a regionally and functionally disaggregated analysis. Allied. p. 374.
  • C. T. Kurien (1981). Mission and Proclamation: The Church in India Today and Other Pieces. Christian Literature Society. p. 116.
  • C. T. Kurien (1989). Dynamics of Rural Transformation: A Study of Tamil Nadu, 1950–1980. University of Nevada Press. p. 169. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 086311086X.
  • C. T. Kurien; E. R. Prabhakar; Sarvepalli Gopal; Malcolm S. Adiseshiah (1991). Economy, society, and development: essays and reflections in honour of Malcolm S. Adiseshiah. Sage Publications. p. 331. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0803996985.
  • C. T. Kurien (1992). The economy: an interpretive introduction. Sage. pp. 436. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0803994281.
  • C. T. Kurien (1992). Growth and justice: aspects of India's development experience. Oxford University Press. p. 295.
  • C. T. Kurien (1994). Global capitalism and the Indian economy. Orient Longman. pp. 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8125002723.
  • C. T. Kurien (1996). Rethinking economics: reflections based on a study of the Indian economy. Sage Publications. pp. 272. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0803993099.
  • C. T. Kurien (1996). Economic Reforms and the People. Madhyam Books. p. 84.
  • C. T. Kurien (2012). Wealth and Illfare: An Expedition into Real Life Economics. Books for Change. pp. 253.

மேற்கோள்கள்

தொகு
  1. NARENDAR PANI (26 March 2012). "Conceiving an alternative future". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 13 April 2012.
  2. Two-in-one Special Edition of the International Authors and Writers Who's Who, International Who's who in Poetry (in ஆங்கிலம்). International Biographical Centre. 1982.
  3. 3.0 3.1 "Dr. C. T. Kurien". Malcolm and Elizabeth Adiseshiah Trust. பார்க்கப்பட்ட நாள் 13 April 2012.
  4. "Arun Shourie to deliver Stanley Samartha memorial lecture". Asia Pacific Ecumenicaql News. September 2009. Archived from the original on 12 January 2013. பார்க்கப்பட்ட நாள் 13 April 2012.
  5. "The Institute". Institute for Social and Economic Change. பார்க்கப்பட்ட நாள் 13 April 2012.
  6. Bureau, The Hindu (24 July 2024). "C.T. Kurien, distinguished economist, no more" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/ct-kurien-distinguished-economist-no-more/article68440057.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._டி._குரியன்&oldid=4170682" இலிருந்து மீள்விக்கப்பட்டது