சி. மகேந்திரன் (இபொக)
சி. மகேந்திரன் (C. Mahendran)(பிறப்பு 1954) என்பவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழக தலைவர்களுள் ஒருவரும் தமிழ் கட்டுரை எழுத்தாளரும் ஆவார்.[1]
இளமை
தொகுமகேந்திரன் தஞ்சாவூர் மாவட்டம் கீழவன்னிப்பட்டு கிராமத்தினைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை சிங்காரம் தாய் வேதாம்பாள் ஆவர். இவர் தஞ்சாவூர் செல்வராசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வியினையும் கல்லூரிப் படிப்பினை மன்னார்குடி மன்னை இராசகோபாலசாமி அரசு கலைக் கல்லூரியிலும், திருவாரூர் திரு. வி. க. அரசு கலைக் கல்லூரியிலும் முடித்துள்ளார். பொதுவுடைமை கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட இவர், கல்லூரிக் காலங்களிலே போராட்டங்களில் கலந்துள்ளார்.
எழுத்துப்பணி
தொகுபள்ளியில் படிக்கும் காலத்தே ஆனந்த விகடன் நடத்திய கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்று மூன்றாம் பரிசைப் பெற்றார். தமிழகத்தின் இளம் அரசியல் தலைவர்களில் ஒருவராக இந்தியா டுடே பத்திரிக்கையால் தேர்வு பெற்றவர். சிகாகோ நகரத்தில் நடைபெற்ற 10வது உலகத் தமிழ் மாநாட்டில் ஆய்வறிக்கை அளித்த 84 அறிஞர்களில் இவரும் ஒருவர். தமிழரின் அறிவு என்னும் இவரது நூலிற்கு எஸ். ஆர். எம். பல்கலைக்கழகத்தின் பரிதிமாற் கலைஞர் உயர் ஆய்வு விருது கிடைத்தது.
இவரின் பிற பனுவல்கள்:[2]
- ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரணசாசனம்.
- தமிழக நதிகளின் மரணசாசனம்,
- தீக்குள் விரலை வைத்தேன்.
- வீழ்வேன் என்று நினைத்தாயோ?
- தமிழகத்தைப் பாலைவனமாக்காதே
- தமிழ்நாடு பிறந்தது (தொகுப்பு)
- விவசாயிகள் போராட்ட பூமியில் 25 நாட்கள்! கொள்ளையனே வெளியேறு
இதழாசிரியர் பணி
தொகுமகேந்திரன் கடந்த இருபது ஆண்டுகளாகத் தாமரை எனும் மாதந்தோறும் வெளியாகும் தமிழ் இலக்கிய இதழின் ஆசிரியர் பொறுப்பில் செயலாற்றி வருகிறார்.
பாடல்கள்
தொகு- இனி வரும் நம் தலைமுறைக்கு
- தன்னானேப் பாடல்கள் (10 பாடல்கள் சின்னபொன்னுடன்)
அரசியல்
தொகுமகேந்திரன் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் 1971ஆம் ஆண்டில் இணைந்தார். தஞ்சை மாவட்டத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் முழுநேர ஊழியராக இணைந்து கொண்டார். அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழகத் தலைவர், செயலாளர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் செயல்பட்டவர் இவர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளராக இருபது ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டிருக்கிறார். 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் மகேந்திரன் ஜெ. ஜெயலலிதாவினை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி வாய்ப்பினை இழந்தார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.keetru.com/thaagam/feb06/mahendran.php
- ↑ "Panuval Bookstore". www.panuval.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
- ↑ "Jayalalithaa wins RK Nagar by-election". The Hindu (in Indian English). 2015-06-30. பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.