சீசியம் அறுபுளோரோகோபால்டேட்டு(IV)
வேதிச் சேர்மம்
சீசியம் அறுபுளோரோகோபால்டேட்டு(IV) (Caesium hexafluorocobaltate(IV)) என்பது Cs2CoF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் சீசியத்தின் ஓர் உப்பாகும்.
இனங்காட்டிகள் | |
---|---|
17250-28-1 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
CoCs2F6 | |
வாய்ப்பாட்டு எடை | 438.73 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Cs3[(CoCl4)Cl] சேர்மமும் புளோரினும் சேர்ந்து வினைபுரிவதால் சீசியம் அறுபுளோரோகோபால்டேட்டு(IV) உருவாகிறது.[1] அரிய கோபால்ட்டு(IV) அணைவு ([CoF6]2-) இச்சேர்மத்தின் உட்கூறாக உள்ளது.
பொட்டாசியம் எக்சாகுளோரோபிளாட்டினேட்டின் (K2PtCl6) கட்டமைப்பை இது ஏற்றுள்ளது. a = 8.91 Å, என்ற அடுக்கு மாறிலி மதிப்பும் Co-F பிணைப்பு நீளம் 1.73 Å. என்ற அளவிலும் உள்ளன.[1] சீசியம் அறுபுளோரோகோபால்டேட்டு(IV) பெரோகாந்தப் பண்பு கொண்டுள்ளது. Co(IV) இன் அடிநிலை ஆற்றல் மட்டம் T2g3Eg2 ஆகும்.[2]
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Quail, J. W.; Rivett, G. A. (1 August 1972). "Complex Fluorides of Tetravalent Cobalt". Canadian Journal of Chemistry 50 (15): 2447–2450. doi:10.1139/v72-394. https://archive.org/details/sim_canadian-journal-of-chemistry_1972-08-01_50_15/page/2447.
- ↑ Allen, Geoffrey Charles; Warren, Keith D. (1 September 1969). "Electronic spectrum of the hexafluorocobaltate(IV) anion". Inorganic Chemistry 8 (9): 1902–1904. doi:10.1021/ic50079a019.