சீசியம் எழுபுளோரோசெனேட்டு

வேதிச் சேர்மம்

சீசியம் எழுபுளோரோசெனேட்டு (Caesium heptafluoroxenate) என்பது CsXeF7 என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீசியம், செனான், புளோரின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

சீசியம் எழுபுளோரோசெனேட்டு
Caesium heptafluoroxenate
இனங்காட்டிகள்
19033-04-6 Y
InChI
  • InChI=1S/Cs.F7Xe/c;1-8(2,3,4,5,6)7/q+1;-1
    Key: IAPXLONHTNZYMY-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Cs+].F[Xe-](F)(F)(F)(F)(F)F
பண்புகள்
CsF7Xe
வாய்ப்பாட்டு எடை 397.19 g·mol−1
தோற்றம் மஞ்சள் நிறத் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

செனான் அறுபுளோரைடை உருகிய சீசியம் புளோரைடில் கரைக்கும்போது சீசியம் எழுபுளோரோசெனேட்டு உருவாகிறது.:[1]

CsF + XeF6 -> CsXeF7

இயற்பியல் பண்புகள் தொகு

சீசியம் எழுபுளோரோசெனேட்டு அறை வெப்பநிலையில் நிலைப்புத்தன்மையோடு மஞ்சள் நிறத்தில் ஒரு திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. இது மிகவும் வலுவான ஓர் ஆக்சிசனேற்றியாகும்.

வேதியியல் பண்புகள் தொகு

சீசியம் எழுபுளோரோசெனேட்டு 50°செல்சியசு வெப்பநிலையில் சிதைவுக்கு உள்ளாகி சீசியம் ஆக்டாபுளோரோ செனேட்டை உருவாக்குகிறது.:[2]

2CsXeF7 -> Cs2XeF8 + XeF6

பயன்கள் தொகு

ஒரு வினை கலவையிலிருந்து செனான் அறுபுளோரைடை தனித்துப் பிரிக்க சீசியம் எழுபுளோரோசெனேட்டு பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு