சீசியம் காட்மியம் புரோமைடு

செயற்கை படிகம்

சீசியம் காட்மியம் புரோமைடு (Caesium cadmium bromide) என்பது CsCdBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு செயற்கை படிகப் பொருளாகும். இப்படிகப்பொருள் AMX3 என்ற குழுவில் இடம்பெறுகிறது. இப்பொது வாய்ப்பாட்டிலுள்ள A என்பது கார உலோகத்தையும் M என்பது ஈரிணைதிற உலோகத்தையும் X என்பது ஆலசன் அயனியையும் குறிக்கின்றன. மற்ற பல புரோமைடுகளைப் போல அல்லாமல் சீசியம் காட்மியம் புரோமைடு நீருறிஞ்சுவதில்லை [2]. இதனால் சூரிய மின்கலன்களில் ஒரு திறனுள்ள உயராற்றல் ஒளியனாக்கும் செயல்முறை பயன்பாட்டுக்கு உகந்ததாக கருதப்படுகிறது [3]. தனி படிகமாக அரிய மண் அயனிகளுடன் ஒரு மாசாகக் கலந்தால் இதை ஒரு செயல்படு சீரொளி ஊடகமாகப் பயன்படுத்த முடியும். கட்புலனாகும் அகச்சிவப்பு மண்டல நிறமாலையில் உயர் ஒளிபுகும் தன்மையைக் கொண்டிருப்பதால் இதை நேரிலி ஒளியியல் படிகமாகவும் பயன்படுத்த முடியும் [4]. Cs2CdBr4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட சீசியம் காட்மியம் புரோமைடும் செயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது [5].

சீசியம் காட்மியம் புரோமைடு
Caesium cadmium bromide
CsCdBr3
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சீசியம் காட்மியம் புரோமைடு
வேறு பெயர்கள்
  • சீசியம் டிரைபுரோமோ காட்மேட்டு
பண்புகள்
CsCdBr3
வாய்ப்பாட்டு எடை 485.028 கி/மோல்
தோற்றம் வெண்மை அல்லது நிறமற்றது
அடர்த்தி 4.53 கி/செ.மீ3[1]
உருகுநிலை 450 °C (842 °F; 723 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Persson, Kristin (2014). "36 Materials Science". Materials Data on CsCdBr3 (SG:221) by Materials Project (Data Set). LBNL Materials Project; Lawrence Berkeley National Laboratory (LBNL), Berkeley, CA (United States). எண்ணிம ஆவணச் சுட்டி:10.17188/1275593.
  2. Barthem, R. B.; Buisson, R.; Vial, JC.; Chaminade, JP. (1985). "ENERGY TRANSFER IN CsCdBr3 : Nd3+SYSTEM". Le Journal de Physique Colloques 46: C7–113–C7–117. doi:10.1051/jphyscol:1985722. 
  3. Cockroft, Nigel J.; Jones, Glynn D.; Nguyen, Dinh C. (1992). "Dynamics and spectroscopy of infrared-to-visible upconversion in erbium-doped cesium cadmium bromide (CsCdBr3:Er3+)". Physical Review B 45 (10): 5187–5198. doi:10.1103/PhysRevB.45.5187. 
  4. Ren, Peng; Qin, Jingui; Chen, Chuangtian (2003). "A Novel Nonlinear Optical Crystal for the IR Region: Noncentrosymmetrically Crystalline CsCdBr3and its Properties". Inorganic Chemistry 42 (1): 8–10. doi:10.1021/ic025813y. பப்மெட்:12513072. 
  5. Altermatt, D.; Arend, H.; Gramlich, V.; Niggli, A.; Petter, W. (1984). "Low-temperature phases in Cs2CdBr4and Cs2HgBr4". Acta Crystallographica Section B 40 (4): 347–350. doi:10.1107/S0108768184002275.