சீட்டா-கரோட்டீன்

சீட்டா-கரோட்டீன் (zeta-carotene) என்பது C40H60 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை ζ-கரோட்டீன் என்றும் எழுதுவர். தாவரங்கள், பாசிகள், பூஞ்சைகள், பாக்டீரியாக்கள் போன்றவற்றால் தயாரிக்கப்படும் கரோட்டீனாய்டு எனப்படும் கரிம நிறமியே சீட்டா கரோட்டீன் எனப்படுகிறது. α-கரோட்டீன் மற்றும் β-கரோட்டீனிலிருந்து இது வேறுபட்டதாகும். ஏனெனில் இதுவோர் அவளையச் சேர்மமாகும் [1]. தக்காளிப் பழத்தில் காணப்படும் பிரகாசமான சிவப்பு நிறங்கொண்ட லைக்கோபீன் என்ற கரோட்டீனாய்டு ஐதரோகார்பனின் கட்டமைப்பைப் போன்றதொரு கட்டமைப்பை சீட்டா-கரோட்டீனும் பெற்றுள்ளது. ஆனால் இதில் கூடுதலாக நான்கு ஐதரசன் அணுக்கள் காணப்படுகின்றன. β-கரோட்டீன் உருவாக்கத்தில் ஓர் இடைநிலையாக ζ-கரோட்டீனை பயன்படுத்த முடியும் [2]. ஐதரசன் நீக்க வினைக்கு உட்படுத்துவதன் வழியாக ζ-கரோட்டீனை லைக்கோபீனாக மாற்றமுடியும். பின்னர் இதை லைக்கோபீன்பீட்டா-சைக்ளேசு நொதியின் செயல்பாட்டால் β-கரோட்டீனாகவும் மாற்றலாம் [3][4].

சீட்டா-கரோட்டீன்
ζ-Carotene
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
7,7’,8,8’-டெட்ரா ஐதரோ-ψ,ψ-கரோட்டீன்
இனங்காட்டிகள்
72746-33-9
ChEBI CHEBI:28068
ChemSpider 4444346
InChI
  • InChI=1S/C40H60/c1-33(2)19-13-23-37(7)27-17-31-39(9)29-15-25-35(5)21-11-12-22-36(6)26-16-30-40(10)32-18-28-38(8)24-14-20-34(3)4/h11-12,15-16,19-22,25-30H,13-14,17-18,23-24,31-32H2,1-10H3/b12-11+,25-15+,26-16+,35-21+,36-22+,37-27+,38-28+,39-29+,40-30+
    Key: BIWLELKAFXRPDE-WTXAYMOSSA-N
  • InChI=1/C40H60/c1-33(2)19-13-23-37(7)27-17-31-39(9)29-15-25-35(5)21-11-12-22-36(6)26-16-30-40(10)32-18-28-38(8)24-14-20-34(3)4/h11-12,15-16,19-22,25-30H,13-14,17-18,23-24,31-32H2,1-10H3/b12-11+,25-15+,26-16+,35-21+,36-22+,37-27+,38-28+,39-29+,40-30+
    Key: BIWLELKAFXRPDE-WTXAYMOSBK
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5280788
SMILES
  • C(=C/C=C/C(=C/C=C/C=C(/C=C/C=C(\C)CC\C=C(/C)CC\C=C(/C)C)C)C)(\CC/C=C(/CC/C=C(\C)C)C)C
பண்புகள்
C40H60
வாய்ப்பாட்டு எடை 540.92 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. "Mutations in the maize zeta-carotene desaturase gene lead to viviparous kernel". PLOS One 12 (3): e0174270. 2017. doi:10.1371/journal.pone.0174270. பப்மெட்:28339488. 
  2. "zeta-Carotene". PubChem. National Center for Biotechnology Information, U.S. National Library of Medicine. பார்க்கப்பட்ட நாள் 2018-12-09.
  3. "The Inheritance of Carotenoid Pigment Systems in the Tomato". Genetics 38 (2): 117–27. March 1953. பப்மெட்:17247427. 
  4. "Metabolic engineering of beta-carotene and lycopene content in tomato fruit". The Plant Journal 24 (3): 413–9. November 2000. doi:10.1046/j.1365-313x.2000.00880.x. பப்மெட்:11069713. https://archive.org/details/sim_plant-journal_2000-11_24_3/page/413. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீட்டா-கரோட்டீன்&oldid=3520544" இலிருந்து மீள்விக்கப்பட்டது