சீதானா
சீதானா | |
---|---|
சீதானா பான்டிசெரியானா, மாதிரி இனங்கள் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சீதானா குவியெர், 1829
|
மாதிரி இனம் | |
சீதானா பாண்டிசெரியானா குவியெர், 1829 |
சீதானா (Sitana) என்பது அகாமிடே குடும்பத்தைச் சேர்ந்த விசிறித்தொண்டை பல்லிகள் என்று அழைக்கப்படும் பல்லிகளின் பேரினமாகும். இவை நேபாளம், இந்தியா, இலங்கை மற்றும் பாக்கித்தானில் காணப்படுகின்றன.[1] இந்தப் பேரினத்தில் பதினான்கு சிற்றினங்கள் உள்ளன. இதில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல சிற்றினங்கள் அடங்கும். இலங்கையிலிருந்து இரண்டு புதிய சிற்றினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[2] 2016ஆம் ஆண்டில், சாரதா என்ற புதிய பேரினம் உருவாக்கப்பட்டது. இதில் சீதானா பேரினத்தினைச் சேர்ந்த சிற்றினம் ஒன்றும், புதிதாக விவரிக்கப்பட்ட இரண்டு சிற்றினங்களும் அடங்கும். சாரதா என்பது சீதானாவின் சகோதரப் பேரினமாகும். இவை ஒன்றாகச் சேர்ந்து ஓர் உட்கோட்டை உருவாக்குகின்றன. இது ஒட்டோகிரிப்டிசு என்ற சகோதரக் குழுவாகும்.[1]
விளக்கம்
தொகுசீதானா சிறிய அளவிலிருந்து நடுத்தர அளவிலான பல்லிகள் கொண்ட பேரினம் ஆகும். இவை நிலத்தில் வசிப்பவை. முதன்மையாக இவை பூச்சிகளை உண்ணுகின்றன. இருப்பினும் மெல்லுடலிகள் மற்றும் தாவர விதைகளையும் சாப்பிடுகின்றன.[1]
ஆண் ஓணான்கள் 37 முதல் 47 மி.மீ நீளமும் பெண் ஓணான்கள் 36 முதல் 52 மிமீ. நீளம் வரை வளரக்கூடியன. ஆண்கள் அசை தாடிகளைக் கொண்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி இனப்பெருக்கக் காலத்தில் பெண்களைத் தொடர்புகொள்கின்றன. அசை தாடிகள் சிற்றினங்களைப் பொறுத்து சிறியதாகவோ பெரியதாகவோ இருக்கலாம். பெண் ஓணான்களில் அசை தாடிகள் இல்லை.[1]
சிற்றினங்கள்
தொகுசீதானா பேரினத்தின் கீழ் 15 சிற்றினங்கள் உள்ளன.
படம் | விலங்கியல் பெயர் | பொதுவான பெயர் | பரவல் |
---|---|---|---|
சீதானா பாகிரி அமரசிங்க, இனீச் & கருணரத்னா, 2015 | பாகிர் விசிறித்தொண்டை பல்லி | இலங்கை | |
சீதானா தேவகை அமரசிங்க, இனீச் & கருணரத்ன, 2014 | தேவகா விசிறித்தொண்டை பல்லி | இலங்கை, இந்தியாவில் தமிழ்நாடு | |
சீதானா தார்வரென்சிசு அம்பேகர், மூர்த்தி & மிர்சா 2020 | இந்தியா | ||
சீதானா புசுகா ஷ்லீச் & காஸ்ட்லே, 1998 | இருண்ட சித்தனா | நேபாளம் | |
சீதானா கோககென்சிசு தீபக், காண்டேகர், சைதன்யா & கரந்த், 2018 | கோகாக் விசிறித்தொண்டை பல்லி | இந்தியா | |
சீதானா காலேசரி பகுகுணா, 2015 | இந்தியா | ||
சீதானா லத்தீசெப்சு தீபக் மற்றும் கிரி, 2016[1] | பரந்த தலை விசிறித்தொண்டை பல்லி | இந்தியா | |
சீதானா மருதம்னீதல் தீபக், காண்டேகர், வர்மா & சைதன்யா, 2016 | இந்தியா | ||
சீதானா பாண்டிசெரியானா குவியர், 1829 | பாண்டிச்சேரி விசிறித்தொண்டை பல்லி | இந்தியா | |
சீதானா ஸ்லெய்சி ஆண்டர்சு & காசுடில், 2002 | சுக்லபந்தா சித்தனா | நேபாளம் | |
சீதானா சிவாலென்சிசு ஷ்லீச், காசுடில் & ஷா, 1998 நேபாளம் (அகணிய உயிரி) எண்டமிக் | சிவாலிக் சித்தனா | நேபாளம் | |
சீதானா இசுபினெசெபாலசு தீபக், வியாசு மற்றும் கிரி, 2016 [1] | முட்தலை விசிறித்தொண்டை பல்லி | இந்தியா | |
சீதானா சுஷிலி தீபக், தில்லக், கர், சர்க்கார், மற்றும் மொஹாபத்ரா, 2021 | சுசில் விசிறித்தொண்டை பல்லி | இந்தியா | |
சீதானா தொண்டலு தீபக், கண்டேகர், சைதன்யா & கரந்த், 2018தீபக், காண்டேகர், சைதன்யா & கரந்த், 2018 | நாகார்ஜுனா சாகர் விசிறித்தொண்டை பல்லி | இந்தியா | |
சீதானா விசிரி தீபக், 2016 [1] | பனை இலை விசிறித்தொண்டை பல்லி | இந்தியா |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Deepak, V.; Giri, Varad B.; Asif, M.; Dutta, S.K.; Vyas, R.; Zambre, Amod M.; Bhosale, Harshal; Karanth, K. Praveen (2016). "Systematics and phylogeny of Sitana (Reptilia: Agamidae) of Peninsular India, with the description of one new genus and five new species". Contributions to Zoology 85 (1): 67–111. doi:10.1163/18759866-08501004. http://www.contributionstozoology.nl/cgi/t/text/get-pdf?c=ctz;idno=8501a04. பார்த்த நாள்: 2024-07-08.
- ↑ Anole annals
- பொதுவகத்தில் சீதானா பற்றிய ஊடகங்கள்
- இது தொடர்பான தரவுகள்சித்தனாவிக்கிப்பீடியாக்களில்