சீதாமர்கி கோயில்

சீதாமர்கி கோயில் பீகார் மாநிலத்திலுள்ள சீதாமர்கி மாவட்டத்தில் உள்ளது.

நுழைவாயில் முகப்பு

அமைவிடம்

தொகு

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அலகாபாத்துக்கும் வாரணாசிக்கும் இடையேயுள்ள சீதாமர்கி என்னுமிடத்தில் சீதைக்கான கோயில் உள்ளது. [1] இந்த இடம் சீதை பிறந்த இடமாகவும் கருதப்படுகிறது. [2]

வால்மீகி ஆசிரமத்தில் லவன், குசன் வளரும்போது, இராமர் அனுப்பிய அசுவமேத யாகக் குதிரை இவ்விடத்திற்கு வந்ததாகவும், அது இராமர்க்குரியது எனத் தெரியாமல் லவன், குசன் அதனைக் கட்டிவைத்ததாகவும், அதனை விடுவிக்க ராமர் வந்ததாகவும், அப்போது இராமருக்கும் லவன், குசன் ஆகியோருக்கும் இடையே சண்டை நடந்ததாகவும், அப்போது சீதை வெளியே வந்து இராமரிடம் பிள்ளைகளைப் பற்றிக் கூறிவிட்டு, பிள்ளைகளை ராமரிடம் ஒப்படைத்துவிட்டு பூமிக்குள் சென்றதாகவும் வாய்மொழியாக ஒரு கதையை அங்கு கூறுகின்றனர். இந்த இடம் சீதாமடி எனப்படுகிறது. [1]

அழகான மரங்கள் சூழ்ந்திருக்க சுற்றிலும் நீர்நிலையோடு அமைந்துள்ள இக்கோயிலின் வளாகத்தில் சீதையின் கதையைக் கூறும் பல சிற்பங்களும் ஓவியங்களும் மிகவும் நேர்த்தியாக கலையம்சத்தோடு அமைக்கப்பட்டுள்ளன.

சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதாமர்கி_கோயில்&oldid=3584196" இலிருந்து மீள்விக்கப்பட்டது