சீதா பின்ட் பகத் அல் தாமிர்
சீதா பின்ட் பகத் அல் தாமிர் (ஆங்கிலம்:Seeta bint Fahd Al Damir; அரபு மொழி: صيتة بنت فهد الدامر ; 25 சூன் 1922 - 25 திசம்பர் 2012) சவுதி அரேபியாவின் மன்னர் காலித்தின் மனைவிகளில் ஒருவர்.
சீதா பின்ட் பகத் அல் தாமிர் | |
---|---|
பிறப்பு | 25 சூன் 1922 |
இறப்பு | 25 திசம்பர் 2012 ரியாத், சவுதி அரேபியா | (அகவை 90)
துணைவர் | சவுதி அரேபியாவின் காலித் |
குழந்தைகளின் பெயர்கள் | பட்டியல்
|
மரபு | சௌதி கொடி வழி (திருமணம் மூலம்) |
தந்தை | ஃபஹத் பின் அப்துல்லா அல் தாமிர் |
தாய் | ரைசா ஷெஹிதன் அல் டேன் அல் அஜாமி |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுசீதா பின்ட் பகத் அல் பதியாவில் உள்ள அஜ்மான் பழங்குடியினரின் உறுப்பினராகவும்,[1] அப்துல்லா பின் ஜிலுவியின் மனைவியான வஸ்மியா அல் டாமிரின் மருமகளாகவும் இருந்தார்.[2] இவரது பெற்றோர்கள் பகத் பின் அப்துல்லா அல் தாமிர் மற்றும் ரைசா ஷெஹிதன் அல் டேன் அல் அஜாமி. இவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் இருந்தனர்.[2] இவரது சகோதரர் அப்துல்லா பின் பகத், அஜ்மான் பழங்குடியினரின் யூதா குடியேற்றத்தின் தலைவராக இருந்தார்.[3]
சொந்த வாழ்க்கை
தொகுசீதா பின்ட் பகத் மன்னன் காலித்தை மணந்தார். இவர்களுக்கு ஏழு குழந்தைகள் இருந்தனர்: ஜவ்ஹாரா, நௌஃப், மௌதி, ஹுசா, அல் பண்டாரி, மிஷால் மற்றும் பைசல் ஆவர். இவரது மகள், மௌடி பின்ட் காலித், 2013 மற்றும் 2016க்கு இடையில் ஆலோசனை சபையின் உறுப்பினராக இருந்தார்.
இறப்பு
தொகுசீதா பின்ட் பகத் 25 திசம்பர் 2012 அன்று ரியாத்தில் இறந்தார்.[4][5] 26 திசம்பர் 2012 அன்று ரியாத்தில் உள்ள இமாம் துர்கி பின் அப்துல்லா மசூதியில் அப்துல்லாஜிஸ் அல் அஷெய்க் தலைமையில் அசர் தொழுகைக்குப் பிறகு, பட்டத்து இளவரசர் சல்மான் பின் அப்துல்லாஜிஸ் உட்படச் சவுதியின் மூத்த அதிகாரிகளின் வருகையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.[6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Wasmiyah al Damir Biography". Datarabia. பார்க்கப்பட்ட நாள் 30 December 2012.
- ↑ 2.0 2.1 "صيتة الدامر "أم الأيتام" وزوجة الملك وأخت الشيوخ" (in ar). Alasmeh News. 3 December 2018 இம் மூலத்தில் இருந்து 15 மே 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210515203057/https://alasmeh.com/31578-2/.
- ↑ Mohammed Suleiman Al Haddad (1981). The Effect of Detribalization and Sedentarization on the Socio-Economic Structure of the Tribes of the Arabian Peninsula: Ajman Tribe as a Case Study (PhD thesis). University of Kansas. p. 87. ProQuest 303145966.
- ↑ "Death of Princess Sita bint Fahd". Saudi Press Agency. 25 December 2012 இம் மூலத்தில் இருந்து 30 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131230234654/http://www.spa.gov.sa/English/readsinglenews.php?id=1062762&content_id=&scroll=1.
- ↑ "His Majesty sends cable of condolences". Times of Oman. 26 December 2012. https://go.gale.com/ps/retrieve.do?tabID=T004&resultListType=RESULT_LIST&searchResultsType=SingleTab&hitCount=960&searchType=BasicSearchForm¤tPosition=87&docId=GALE%7CA313109566&docType=Brief+article&sort=Relevance&contentSegment=ZNEW-FullText-Exclude-FT&prodId=STND&pageNum=5&contentSet=GALE%7CA313109566&searchId=R1&userGroupName=wikipedia&inPS=true.
- ↑ "Crown prince attends funerals of Prince Turki, Princess Seeta". Arab News. 27 December 2012. http://www.arabnews.com/crown-prince-attends-funerals-prince-turki-princess-seeta.
- ↑ "Funeral prayers for Turki bin Sultan". Saudi Gazette. 27 December 2012. http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20121227147268.